:100 புத்த ஞாயிறு
குமாரகவி: நான் பிறவிக் குருடனில்லை யம்மா, கல்லூரிப்
- படிப்பு முடிகிறவரை வசீகரமான கண்களும் வனப்பு மிகுந்த பார்வையுமாகத்தான் இந்த உலகத்தில் நான் சுற்றி வந்திருக்கிறேன். அந்தப் பருவத்தில், ஒரு மின்னல் என் பார்வையைப் பறித்தது...
சுகுளு: ஒரளவு தெரியும் ஐயா...தண்பர்கள் சொல்லக்
கேட்டிருக்கிறேன்...
- குமார கவி. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன் பெண்ணே, என்னைப்போல் ஒரு குருடனுக்கு நீ மனைவி யாக இருப்பதைவிட வாழ்க்கைத் துணையாக இருப்பது தான் பொருந்தும். இனி நான் உலகத்தைக் காண்ப திற்கும், உலகம் தன்னை எனக்குக் காட்டுவதற்கும், நீயே கண்களாவாய்! - -
சுகுணு: மிகவும் பேறு பெற்றவள் ஐயா நான்.அப்படியே கான் இதுவரை இருந்திருக்கிறேன். இனியும் இருப் பேன். - -
குமாரகவி: பொறு பெண்ணே! இரண்டு பேருக்குமாகச் சேர்த்துப் பார்க்கிற கண்களுக்குப் பொறுப்பும், சிரம மும் அதிகம். என்னுடைய பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு என்னைக் கணவகை ஒப்புக்கொண்டு கழுத்தை நீட்டுவதற்கு எத்தனையோஏழைப் பெண்கள் துணிந்து முன்வரலாம். நானே ஒரு மனைவியை மட்டும் தேடவில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். என்னை ஒப்படைக்க நம்பிக்கை வாய்ந்த ஒரு துணைவி யைத் தேடுகிறேன். துணையில்லாமல் இனியும் நீண்ட தூரம் நடந்து விட முடியும் என்ற நம்பிக்கை இந்தக் குருடனுக்கு இல்லை. வாழ்க்கையில் இன்னும் போக வேண்டிய தொலைவும், கடக்க வேண்டிய மேடு பள்ளங் -களும் நிறையவே இருக்கும் போலத் தோன்றுகிறது.