பக்கம்:புத்த ஞாயிறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி isto

இளைஞன்: எனக்கு அவற்றை எல்லாம் பற்றி எதுவும்

தெரியாது.

பிட்சு: ஒன்றும் தெரியாத உன்னேடு எல்லாம் தெரிந்த

நான் எப்படி வாதிட முடியும்? -

இளைஞன்: இந்தக் கேள்வியின் மூலம் என்னை அவமானப் படுத்துகிறீர்கள் அடிகளே! என் வாழ்க்கையிலேயே நான் இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை யார் முன்னும் எதிர் கொண்டதில்லை. என்னுடைய தோள்களின் வலிமையால் எதையும் வென்றே பழக்கப்பட்டவன் நான். தோற்றுப் பழக்கப்பட்டதில்லை.

பிட்சு தோள்களின் வலிமையால் மட்டுமே வெல்ல முடியாத எத்தனையோ அம்சங்கள் மனித வாழ்வில் உண்டு என்பதை நீ இன்னும் அறியவில்லை போலிருக் கிறது. - -

இளைஞன்: அப்படிப்பட்ட அம்சங்களில் கூட உங்களை வெற்றி கொள்கிற வலிமையோடு மறுபடி எப்போ தாவது உங்களை நான் சந்திப்பேன் என்பதை மறந்து விடாதீர்கள் அடிகளே! -

பிட்சு அதைத்தானே நானும் எதிர்பார்க்கிறேன் தம்பீசி

இளைஞன்: போய் வருகிறேன் அடிகளே!

பிட்சு: நன்முகப் போய்வா... - -

(இளைஞன் ஏமாற்றத்தோடு செல்கிருன், பிட்சு மட்டும் தயங்கி நிற்கிருர்) -

பிட்சு (தனக்குள்) இளைஞன் போய்விட்டான்: இதோ அருகிலிருக்கும் நாடகமகளிர் வீதி வழியே மறுபடி நாளங்காடிக்குப் போகிறேன். இன்னும் யாரையாவது: சந்திக்க நேர்ந்தால் அதுவும் என் வாழ்க்கைக்கு ஒர் அதுபவ பாடமாக அமையும். நடன மாதரும்-பரத் தையரும் ஆகிய இளம் பெண்கள் வாழும் இந்த வீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/21&oldid=597384" இலிருந்து மீள்விக்கப்பட்டது