புத்த ஞாயிறு
யில் துறவியாகிய நான் செல்வதே பலத்த சந்தேகத் தைப் பிறருக்கு உண்டாக்கும். ஆயினும் நான் இந்த வீதி வழியேதான் போவேன். (கணிகையர் வீதிவழியே செல்லத் தொடங்குகிருர்) (திரை)
காட்சி-4 இடம்:-கணிகையர் வீதி
(மனத்தை மயக்கும் குழல்-யாழ்-முதலிய கருவிகளின் இசையின் கதம்ப ஒலிகள், பெண்களின் பல்வேறு கீதங்
களின் குரல்கள், பலர் நடமாடும் சலங்கை சிலம்பு
ஒவிகள் - தத்திம் - தீம் - ததன - தீம் என நட்டுவனர் கள் தாளமிடும் ஓசை) - (தெருவில் புகுந்த புத்த பிட்சு-தனக்குத்தானே கூறி வியந்து கொள்கிரு.ர்.)
பிட்சு: ஆகா! என்ன வனப்பு...? எத்தனை பிரகாசம்?
சொப்பனபுரி போல் அல்லவா இருக்கிறது இந்தத்
தெரு...? இது யார் இவள்! பருவமும், இளமையும் சிலம்பு குலுங்கும் பாதங்களுமாக இந்தக் கணிகை ஏன்
என்னை நோக்கி இப்படி ஒடிவருகிருள். (குரலில் வியப்பு
திகைப்பு)
கணிகை; சுவாமீ! வரவேண்டும். வரவேண்டும். தங்கள்
நல்வரவை ஏற்பதற்கு எங்கள் வீதி பாக்கியங்கள் பல செய்திருக்க வேண்டும்.
பிட்சு: இளம் பெண்ணே! ஏறிட்டுப் பார்க்க வைக்கும்
எழிலரசியே! நான் இந்த வீதியில் யாரை நாடியும், எதைத் தேடியும் வரவில்லை. மணிபல்லவ யாத்திர்ை செய்வதற்கு முன்னல் நான் அநுபவ பாடங்களே நிறையப் பெறவேண்டும் என்று இந்தப் பூம்புகார் நகரில் வீதி வீதியாகச் சுற்றி அலைகிறேன். வேருென்று மில்லை. -