நா. பார்த்தசாரதி 37;
நிறைவேற்றுவதனால் உங்களுக்கும் பெரும் பயன்
இருக்கும். பிட்சு : (கீழே இறங்கி நின்று கொண்டு) ஐயா எட்டிப்
பட்டம் பெற்ற செல்வரே! இந்தப் பேச்சில் இரண்டா
வது சிந்தனைக்கு இடமே கிடையாது. போய் வாருங்
கள். உயிர்களின் துக்க நிவாரணத்துக்கு வழி தேடு
வதை விட ஒரு புத்த பிட்சுவின் வாழ்விற்குப் பெரும்.
பயன் தரக்கூடியது வேறெதுவுமே இருக்க முடியாது. செல்வர் : அப்புறம் உங்கள் விருப்பம். வருகிறேன். - பிட்சு : தாராளமாகப் போய் வாருங்கள்.
(திரை)
காட்சி-3
இடம்:-நாளங்காடி
(புத்த பிட்சு மறுபடி நாளங்காடிக்கு வருகிருர்-மறு. படி நாளங்காடியின் ஒலிகள் அவரைச் சூழ்கின்றன) புத்த பி : (தமக்குள்) நல்ல வேளையாகத் தப்பிப் பிழைத்.
தேன். என்னுடைய இலட்சியம் நிறைவேறி நான் மணிபல்லவ யாத்திரையை மேற்கொள்ள இருக்கும். இந்தச் சமயத்தில் எனக்கு இப்படி ஒரு சோதனையா? யாருக்கு வேண்டும் செல்வமும் திருமணமும்? . (இப்படி அவர் சிந்தித்தபடியே நடக்கும்போதில் வேறு ஒர் இளம் பிட்சு எதிரே வருகிருர்) . வாலிப பி: ஐயா! தங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? யோசித்துச் சொல்லுங்கள். - பிட்சு: எங்கோ நீண்டகாலத்துக்கு முன்பாகப் பார்த்த
நினைவிருக்கிறது. ஆனல் எங்கே எப்போது என்பது. தான் நினைவில்லை. .
வாலிப: சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முற்பகல் வேளே யில் இதே நாளங்காடியில்-உருண்டு திரண்ட தோள்