“52 கோதையின் காதல்
முதுமகன். நீ என்ன சொல்கிருய் என்றே எனக்குப் புரிய வில்லை பெண்ணே! கூட்டம் எல்லாம் கலைந்து போயா யிற்று... சாப்பிடப்போகலாம்... வா. (உணவு உட்கொண்டு பெரியவர் களைப்பால் உறங்கி விடுகிரு.ர். நிலா இரவில், மறுபடியும் அந்த ஒலை நறுக்கை இடுப்பிலிருந்து எடுக்கிருள் கோதை... இதழ் களில் ஒற்றிக் கொள்கிருள். அப்போது......!
இருளிலிருந்து குரல் : சீத மதிமுகமும் சீர்முத்துப் புன்ன
கையும்...'
கோதை யார் அது? இந்த இருட்டு நேரத்தில்...ஆம்! அதே
சொற்கள்...அதே பாடல்... .
(மண்டபத் தோட்டத்து மகிழ மரத்தடியில் அமர்ந்து அந்த இளைஞன்தான் பாடிக் கொண்டிருக்கிருன் மறுபடியும் அவன் பாடத் தொடங்கும்போது கோதை யைப் பார்த்துவிடுகிருன்) -
இளைஞன் : ஆகா! எவ்வளவு வியப்பு? நீ வருவாய் என
நான் கனவுகூடக் காணவில்லையே?
கோதை : கனவு காண்பது ஒருவேளை உங்களைப் போன்ற
கவிகளுக்கு வழக்கமாயிருக்கலாம். -
இளைஞன் : கனவிலும் கற்பனையிலும் இடைவிடாமல் தோன்றிக்கொண்டிருக்கிற உருவம் எதுவோ, அதுவே நேரில் வந்து நின்று விட்டால் அப்பால் கனவு காண் பதற்கு என்ன இருக்கிறது?
|கோதை நாணித் தலைகுனிகிருள். கோமளமானதொரு மெல்லிய குரலில் பேசுகிருள்!
கோதை என் பெயர் கோதை என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? பெயர்கூடப் பொருந்தி வருகிற விதத்தில், நான் ஆடிக்கொண்டிருக்கும்போதே அவ் வளவு விரைவில் நீங்கள் அதை எப்படிப் பாடினீர்கள்?