பக்கம்:புத்த ஞாயிறு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கோதையின் காதல்

யும் முத்துமாலையும் பரிசளித்தார்கள். ஆனல் என்னு டைய மனம் ஒப்பி நான் அங்கீகரித்துக் கொண்ட ஒரே பரிசு உங்கள் கவிதை மட்டும்தான்.

இளைஞன் : இதைப் பாடு என்று இதயமே தானகப் பொங்கி மேலெழுந்தால் ஒழிய நான் எதைப் பற்றியும் எத்தப் பயனை எதிர் பார்த் தும் புகழ்ந்து பாடுவதில்லை. ஆமாம்...இந்த விழா முடிகிறவரை நீ நாச்சியார் புரத் தில் தானே இருப்பாய்?

கோதை . ஏன்? எதற்குக் கேட்கிறீர்கள்?

இளைஞன் : ஒன்றுமில்லை! நாளேக்கு இசைத் திருவிழா. இந்த எட்டுப் பா8ளயத்துக்கு இசை ஞானம் உண்டோ இல்லையோ, தேச தேசாந்திரங்களிலிருந்து வந்திருக்கிற இசைக் கலைஞர்களெல்லாம் இவர்களிடம் தங்கள் சாமர்த்தியத்தைக் காண்பிக்கப் போகிரு.ர்கள்.

கோதை நீங்களும் தானே?

இளைஞன் நாளைக்குத்தான் நீயே நேரில் பார்க்கப்

போகிருயே...வருகிறேன்... (அவன் விடைபெற்றுச் செல்கிருன். சத்திரத்தின் மறு பக்கம் அவனுடைய உருவம் மறைகிறவரை அவனேயே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டுத் திரும்புகிருள் கோதை.)

(திரை)

காட்சி-2 இடம்:-வேனில்விழா நடைபெறுமிடம்

வேனில் விழாவில் இரண்டாம் நாள்...இசைத் திருவிழா, வசந்த மாலை அம்மன் கோவில் பொது வெளியில் அமைந்திருந்த அரங்கில் கலைஞர்கள் ஆடம் பரமாக அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிருர்கள். சரிகைத் தலைப்பு மேலாடை, வெள்ளிப் பூண் பிடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/56&oldid=597419" இலிருந்து மீள்விக்கப்பட்டது