பக்கம்:புத்த ஞாயிறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

கோதையின் காதல்

இப்படித் துயரமாக நேரும் என்று நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லையே!

Iகோதையின் அழுகையும் கதறலும் அந்த மூங்கில் காடெல்லாம் எதிரொலிக்கிறது.)

மணவாளன் : கோதை! இனிமேல் நீ அழுது என்ன பயன்?

இதோ என்னைப்பார்! இந்த ஊருக்கு நீயும் புதியவள், நானும் புதியவன், இரவு ஆக ஆகக் காட்டில் விலங்கு களின் தொல்லே அதிகம். உன் தந்தையின் சடலத்தை இங்கிருந்து ஊர் மயானத்துக்குச் சுமந்து சென்று இறுதிக்கடன்களைச் செய்து விடலாம்! சந்தர்ப்பத்துக்கு மட்டும் உதவ வந்த சாதாரணத் துணையாக என்னை நினைத்துவிடாதே பெண்ணே! என்னுடைய சத்திய மான துணையும், ஆதரவும், உனக்கு என்றும் உண்டு. உன்னுடைய கழைக்கூத்தைப் பார்த்த முதல் விநாடியே கல்லாய் இறுகிப் போயிருந்த என் இதயத்தை நீவென் றிருக்கிருய்! இந்த வெற்றி உன்னைக் காப்பாற்றும்.

கோதை தவறு...என் இதயம்தான் உங்களுக்குத் தோற்

றுப் போயிருக்கிறது, நீங்கள் ஒரு மகாகவி, இசை மேதை, நான் உங்கள் தோளில் மணப்பதற்காகவே மலர்ந்த பூமாலை, நீங்கள் மணவாளர், எனக்கு உற்ருர் உறவு எல்லாம் நீங்கள்தான். என்னுடைய தந்தை இறந்ததற்காக நான் உங்களைத் தழுவிக்கொண்டுதான் அழவேண்டும். உங்களைச் சாதாரணத்'துணையாக நான்

ஒருபோதும் நினைத்ததில்லை. உங்களை என் வாழ்க்

கைக்கே துணையாக அடையவேண்டுமென்று. பார்த்த கணத்திலிருந்து உருகித் தவிக்கிறேன் நான். என். னுடைய இந்தக் கைகள் உங்களுடைய பாதங்களைத் தொழுவதற்காகவே மலர்ந்த பூக்கள்! .

மணவாளன் : அதிகம் உணர்ச்சி வசப்படாதே கோதை!

இனி மேலே ஆக வேண்டியதைக் கவனிப்போம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/66&oldid=597431" இலிருந்து மீள்விக்கப்பட்டது