பக்கம்:புத்த ஞாயிறு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கில் நாடகத்துக்கென்று ஒரு கதை. இதில் உணர்ச் சிகளாலும், குணங்களாலும், வேறுபட்ட பல வகைக்கதா பாத்திரங்கள் அடுத்தடுத்து வளரும் சம்பவத் திருப்பங்கள். கதையின் இணையற்ற உச்சநிலை... இவையெல்லாம் ஏற் பட்டு வளரும் சூழ்நிலை உருவானபோதுதான் இந்தத் துறை தனி மதிப்பும் கவனிப்பும் பெற்றது. நாடகத் துறைக்கு ஏற்பட்ட இந்த வளர்ச்சி சிலப்பதிகாரக் காலத் துக்கு முன்பே உயர்வு பெற்று ஓங்கத் தொடங்கி இருந்த தென்று கூறலாம். பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், கூத்த தி ல் ஆகிய நாடகத் தமிழ் நூல்களெல்லாம் முன்பு இருந்தன என்பது சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையினுல் தெரிய வருகிறது. நாடகக் கலே இணையற்ற வளர்ச்சி பெற்றிருந்த அந்தக் காலத்துக்குப் பின் இசை நாடகம் காமத்தை விளைவிக்கும்' -என்ற தவருன கருத்தால் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப் பெற்று நலிந்து போகும் நிலையும் ஒரு காலத் தில் வந்தது. அதுதான் நாடகக் கலையின் வரலாற்றிலேே இருண்ட காலம். - . . .

இனி நாடகக் கலையில் பழந்தமிழர் கொண்டிருந்த வழக்காறுகள் சிலவற்றைக் கவனிப்போம். நடிப்போர் நின்று நிகழ்த்துமிடம் அரங்கம் எனவும், காண்டோர் அமருமிடம் அவையம் எனவும் பிரிக்கப்பட்டது. அரசர் முதலாயிளுேருக்காகச் சிறப்பு வகையால் நடிக்கப்படுபவை 'வேத்தியல்' எனவும்-எல்லார்க்கும் பொதுவாக நடிக்கப் படுபவை பொதுவியல்' எனவும் வகைசெய்யப்பட்டிருந்தன. அரங்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் பழைய நாடக நூல்கள் எல்லாம் இலக்கண வரையறை செய் திருந்தன. கூத்தருக்கும், பாணருக்கும், விறலியர்க்கும். பொற்பூவும், பொற்ருமரையும் போல்வன பரிசில் நல்கிச் சிறப்புச் செய்யும் வழக்கத்தை அரசர்கள், மேற்கொண் டிருந்தனரென்று தெரிகிறது. சிறந்த கலைஞர்கள் தலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/7&oldid=597370" இலிருந்து மீள்விக்கப்பட்டது