பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置8 புனே பெயரும் முதல் கதையும் அடியார் அர்ச்சிக்கும்போது பிரயோகிக்கும் பதம் போன் றது!’ என்று அந்தக் கலை”யை ஓர் உபாசனையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது என் கொள்கை: நடைமுறைத் தத்துவமும்கூட. ஆகவே, எழுதுவது கலே, எழுதுபவன் கலைஞன் என்று சொல்லும்போது, தானே ஒரு எழுத்தாளனுக இருந்து கொண்டு, பேணு பிடிக்கும் மற்றவர்களைப் பார்த்து-அறி முகம் இல்லாதவர்களாக இருந்தபோதிலும்- பலே! உங் கள் கதையை இந்தப் பத்திரிகையில் படித்தேன். இந்த இடம் அபாரம். நல்ல கருத்து. ஆனால் இந்த இடத்தில் இப்படி மாற்றியிருக்கலாம்!” என்று ஒருவர் மனம் விட்டுக் கூறினல், அந்தக் கலையை-அந்தப் பண்பை எவ்வார்த்தை கொண்டு வர்ணிப்பது? பிறர் கருத்தை, எழுத்தின்வெற்றி தோல்வியை பண்பட்ட ஒர் உள்ளம் விமர்சிக் கிறதே-இந்த உணர்வுதான், எழுத்தெனும் செடிக்கு வார்க்கும் நீர் போன்றது. அப்படி ஒரு நண்பர் எல்லோ ருக்கும் கிடைத்தால்? நான் கொடுத்து வைத்தவன்; கிடைக்கப் பெற்றேன். பலன்: நான் பிலஹரியானேன். 1954-ம் ஆண்டு. அப்போது பெரம்பூர் வாசம் எனக்கு. ஐந்து பகுதி கள் கொண்ட காலனியில், இரண்டாவதாக நானும் முதல் போர்ஷ னில் நண்பர் திரு ஜடாதரனும் இருந் தோம். . . . . . . . . - - அந்த இடத்திற்குக் குடியேறிய குறுகிய காலத்திற் கெல்லாம் ஜடாதரனை ஒரளவு புரிந்துகொண்டு விட்டேன். கையில் பேளு பிடிப்பவன்-நல்லதொரு சிருஷ்டியை படைத்தாளுகில், அவன் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து சபாஷ் போடும் இந்தக் கலை உள்ளம்தான், என்னுள் நீறு பூத்த நெருப்புப் போன்று வெகுநாள் உறங்கிக் கிடந்த அந்த ஆசையைக் கிளறிவிட்டது. அப்போது நான் எழுத் தாளனுக இல்லாவிட்டாலும், பத்திரிகைகளின் கதைகள்,