பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

X 6.உட்பொருளை உணர்த்தும் நயம் 7. கவிஞனின் உள்உணர்வு 8. கற்பனை நயம் ஆகிய எட்டு உணர்வு வட்டங்களும் சிறப்பாகச் சிறந்த கவிஞனுக்கு வேண்டப்படுவனவாகும். இந்த எட்டு உணர்வு வட்டங்களும், புரட்சிக்கவிஞரின் செவ்விய உள்ளத்தில், கவிதை புனையும்போது சுழன்று கொண்டே இருப்பனவாகும். கவிதை என்பது எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும்? என்ற குறிப்பைக், கல்வியிற் பெரியவரான கம்பர். கற்பனைக் கதையான தம்முடைய இராமகாதையில், ஓரிடத்தில் அழகுறச் சுட்டிக்காட்டுகிறார். இராமன் தன் வீரர்குழாத்துடன் கோதாவரி ஆற்றின் கரைக்கு வந்து சேருகிறான். எல்லோரும் சேர்ந்து கோதாவரியை காண்கின்றனர் என்பதை விளக்க வந்த கம்பர், கவிதைக்கான இலக்கணம் கூறும் தம் குறிக்கோளைக் கோதாவரியோடு இணைத்துச் சொல்லுகிறார். கோதாவரி ஆற்றைச் சான்றோரின் கவிதைக்கு ஒப்பிடுகிறார். சான்றோரின் கவிதை. எவ்வாறு சிறப்பு நயங்கள் பலவற்றையும் பெற்றுத் திகழுமோ, அவ்வாறு கோதாவரி ஆறும், நலங்கள் பலவற்றையும் பெற்று விளங்குகிறது என்கிறார். கவிதையின் தன்மைகளைக் கூறவந்த கம்பர். கவிதையானது. சிறந்த அறம் - பொருள் - இன்பம் என்னும் உறுதிப் பொருள்களின் திறத்தை உணர்த்துவதாக இருக்க வேண்டும்! கற்போரின் நுண்ணறிவை வளர்ப்பதாக அமைய வேண்டும்! அறிவைக்கொண்டு, ஆராய்ச்சி செய்யச் செய்ய, ஆழ்ந்த கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்க வேண்டும்! ஆழ்ந்த பொருளுடையதாகவும், அறிவுக்கு உகந்ததாகவும் அமைய வேண்டும்! எழுத்து சொல் - பொருள் யாப்பு அணி என்னும் தமிழ் இலக்கண ஐந்தின் நெறி படைத்ததாக இருக்க வேண்டும்! பொருளின் பாகுபாடாகிய அகம் புறம் என்னும் இரண்டினையும் உணர்த்தி, அகப் பொருள்களின் பாகுபாடு களாகிய களவு கற்பு என்னும் ஒழுக்கங்களின் தன்மைகளைக் கூறுவதாக அமைய வேண்டும்! ஐவகை ஒழுக்கங்களையும், அவற்றிற்குக் கூறுபாடான வற்றையும்,உரைப்பதாக இருக்க வேண்டும்!