பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

XI என்னும் அழகுக்கு முழு இடங் விளங்கவைத்தல் கொண்டதாக அமைய வேண்டும்? நன்றாகப் பொருள் பயப்பதாகவும், நல்லொழுக்கத்தை உணர்த்துவதாகவும் இருக்க வேண்டும்! மெல்லென்ற ஓசையோடு, தங்கு தடையின்றிச் செல்லும் சிறந்த நடையை உடையதாகவும் அமைய வேண்டும்! என்று விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிடுகிறார். Fi புவியினுக்கு அணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்றாகி. அவி அகத்துறைகள் தாங்கி. ஐந்தினை நெறி அளாவி, கவியுறத்தெளிந்து, தண்ணென்(று) ஒழுக்கமும் தழுவிச், சான்றோர்க் கவியெனக் கிடந்த கோதா வரியினை, வீரர் கண்டார்!" என்பது கம்பரின் பொருள் பொதிந்த அழகான செய்யுளாகும். கவிதையைப் பொறுத்துக், கம்பர் தெளிவுபடுத்திக் காட்டிய இலக்கணத்தின் தன்மைகள் முழுமையும். அப்படியே. புரட்சிக்கவிஞரின் கவிதைகளில் படிந்திருப்பதை எவரும் கண்டு மகிழலாம். தமிழ் இலக்கியங்களைச் சங்ககால இலக்கியங்கள். இடைக்கால இலக்கியங்கள். இற்றைக்கால இலக்கியங்கள் என்று மூவகையாகப் பிரிக்கலாம். சங்ககால இலக்கியங்கள் என்ற முறையில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. திருக்குறள் போன்றவைகளைக் கூறலாம். இவற்றையெல்லாம் 'பலாப்பழ இலக்கியங்கள்' என்று குறிப்பிட வேண்டும். இடைக்கால இலக்கியங்களான சிலப்பதிகாரத்திலிருந்து திருவருட்பா வரையிலுள்ள இலக்கியங்களை இடைக்கால இலக்கியங்கள் என்று சொல்லலாம். இவற்றையெல்லாம் 'மாம்பழ இலக்கியங்கள்' என்ற கூற வேண்டும். பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் போன்றவைகளை இற்றைக்கால இலக்கியங்கள் என்று பகரலாம். இவற்றையெல்லாம் 'வாழைப்பழ இலக்கியங்கள்' என்று சொல்ல வேண்டும். பலாப்பழச் சுளை மிகுந்த சுவைமிக்கது. ஆனால் அதனை எடுத்துச் சுவைக்க, முட்கள் மேவிய மேல் தோலை அகற்றிப்.