பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூன்முகம் 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!" என்று வாழ்நாளெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். என் உள்ளங்கவர்ந்த ஒரு சில கவிஞர் பெருமக்களில் தலைசிறந்து விளங்கியவர் ஆவார். அவர் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர்; அவரை அடுப்பாடும் எடுப்பாரும் எவரும் இலர். அவரைப் பற்றியவை என்று எவை எவையெல்லாம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு மிளிர்கின்றனவோ, அவ்வலற்றையெல்லாம் எல்லோரும் உணர்ந்து, உவகைப் பெருக்குற்று, உறுபயன் பெற வேண்டும் என்ற வேணாவாவின் தூண்டுதலே, 'புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்' என்ற இந்த நூல் தோற்றம் பெறுவதற்கு, முழுமுதற் காரணமாக இருந்தது ஆகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் ஈடும் எடுப்பும் அற்ற கவிஞர்களாக விளங்கிய இருவரில், சுப்பிரமணிய பாரதியார் புதுநெறி காட்ட வந்த 'புதுமைக்கவிஞர்' என்றால், கனகசுப்புரத்தின பாரதிதாசன் புரட்சிநெறிகாட்ட வந்த 'புரட்சிக்கவிஞர்' ஆவார். பாவேந்தர்கள் என்று புகழ்பெற்ற பெரும்புலவர்கள் அற்றைத் தமிழகத்திலும், இற்றைத் தமிழகத்திலும் பலபேர்கள் வாழ்ந்ததுண்டு என்றாலும், 'புரட்சிக்கவிஞர்' என்ற பெயருக்கு ஏற்ற பொருத்தமுடையவராக வாழ்ந்த ஒப்பிலா ஒரு பெரும் கவிஞர், கனகசுப்புரத்தின பாரதிதாசன் ஒருவரே ஆவார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளில், நான் மிகுந்த ஈடுபாடும், நீங்காப் பற்றும், தணியா ஆர்வமும், குன்றா எழுச்சியும் கொண்டு விளங்குவதற்குக் காரணங்கள் பல உண்டு. புரட்சிக்கவிஞர் அவர்கள், கவிதைகளில் புதிய பாங்குகளைக் கண்டவர்!. பல பொருள்களின் அழகையும், அருமையையும்,