பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

VI - சிறப்பையும். செம்மையையும், புகழையும், பெருமையையும் உண்மையையும், உயர்வையும் பாடல்களில் படம் பிடித்துக் காட்டியவர்! புரட்சிகரமான கருத்துக்கள் பலவற்றையும் பாடல்களிலே புகுத்தியவர் வேண்டத் தகாத பழைமைகளைச் சாடியவர் வேண்டத்தகுந்த புதுமைகளை உணர்த்தியவர்! பாராட்டத்தக்க பழைமைகளையும், வரவேற்கத் தக்க புதுமைகளையும் போற்றியவர்! மூடப்பழக்க வழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் தகர்த்தெறிந்தவர்! பகுத்தறிவு நெறியின் ஒளி, பாரெங்கும் பரவிட அரும்பணிகள் பலவற்றையும் ஆற்றியவர்! தமிழ் தமிழர் தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், எழில்பெற வேண்டும் என்பதற்காகப் பெரும் பாடுபட்டவர்! பாடல்களில் சொல்லுக்குச் சொல் சுவை ஊட்டியவர்! பொருளுக்குப் பொருள் ஒளி கூட்டியவர்! கவிதைகளில் வீரச்சுவையையும், நகைச்சுவையையும் மிகச் சிறப்பாக மிளிரச் செய்தவர்! கேலி கிண்டல் மூலம் எதிர்ப்பாளர்களையும். இழிமக்களையும் வீழ்த்தியவர்! எவருக்கும் தாழாதவர் எவரையும் தாழ்த்தாதவர்? அஞ்சிவாழாதவர்? கெஞ்சிப் பிழைக்காதவர்! சுயமரியாதை இயக்கச் சுடரொளி எங்கும் வீசும்படிச் செய்தவர்! திராவிட இயக்கத்தின் கொள்கை குறிக்கோள் -கோட்பாடு போன்றவை ஆக்கமும் ஊக்கமும் பெற உழைத்தவர்1 தனித்தமிழ் இயக்கத்தையும், தமிழிசை யியக்கத்தையும் வளர்த்தவர்! சொற்போர்க் களங்கள் பல கண்ட வர்: வெற்றி பல கொண்டவர்! பைந்தமிழ்த் தேர்ப்பாகனாகத் திகழ்ந்தவர் செந்தமிழ்த் தேனீயாகப் பறந்தவர்1 சிந்துக்குத் தந்தையாக விளங்கியவர்! குவிக்கும் கவிதைக் குயிலாகப் பாடித் திரிந்தவர்! பகையைக் கவிழ்க்கும் கவிமுரசாக முழங்கியவர்! நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலாவாகத் தோன்றியவர் காடு கமழும் சொற்கோலாக மிளிர்ந்தவர்! கற்பனை ஊற்றாம் கதையின் புதையலாக ஒளிர்ந்தவர்! திறம் பாட வந்த மறவர் என்று பெயர் பெற்றவர்! அறம் பாட வந்த அறிஞர் என்று புகழப்பட்டவர்! நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்தாக விளங்கியவர்! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பாகத் திகழ்ந்தவர்! அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்காக நின்றவர்! தமிழால் தகுதியைப் பெற்று விளங்கியவர்! தமிழுக்குத் தகுதியைப் பெற்றுத் தந்தவர்! தமிழ் இலக்கிய உலகில் தலைதாழாச் சிங்கமாக வீறு நடைபோட்டு வெற்றி உலா வந்தவர்! தமிழை ஆரா அமுதாகக் கருதியவர்? -