பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

VII தமிழைத் தம் உயிருக்கு நேராக எண்ணியவர்! தமிழை வெண்ணிலாவாகப் பார்த்தவர்! தமிழைச் சமூகத்தின் விளைவுக்கு நீராகக் கண்டவர்! தமிழினிடத்தில் நறுமணத்தைப் பெற்றவர் தமிழைத் தம் வாழ்வுக்கு ஏற்ற ஊராகக் கருதியவர்! தமிழை நறுந்தேன் என்று எண்ணியவர் தமிழைத்தமிழரின் உரிமைச் செம்பயிருக்கு வேராகக் கண்டவர்! வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழகத்திற்கு எழுச்சி தந்தவர்! விசையொடிந்து கிடந்த உள்ளங்களுக்கு வலிமை ஊட்டியவர்! குழ்ச்சிதனை வஞ்சகத் தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித், தூள் தூளாக்கியவர்! காழ்ச்சிந்தையையும், மறச் செயல்களையும் மிகவாகக் கொண்டவர்! கடல்போல செந்தமிழைப் பெருக்கியவர்! நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும், 'நான் - நான் -நான்' என்று முழங்கியவர்! புரட்சிக்கவிஞர் இப்படிப்பட்டவர் என்ற காரணத்தினால் தான். நான் அவரிடத்தில் மிகுந்த பற்றுள்ளங் கொண்டு திகழ்ந்தேன்; திகழ்கிறேன். புரட்சிக்கவிஞர் அவர்கள், 'பாரதிதாசன்' என்ற புனைபெயரை, ஏன் வைத்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை.1961-ஆம் ஆண்டில் வெளிவந்த 'குயில்' இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளார். நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம், அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம்! அவருக்கு முன், பன்னூற்றாண்டுகளுக்கு முன், அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே, பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டதும், ஏதாவதொரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு, விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப்போல, எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே!" தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 'பாரதிதாசன்' என்னும் புனைபெயர் 'பாரதிக்கு அடிமை' என்ற பொருளில் வைத்துக் கொண்ட பெயர் அல்ல. என்று