பக்கம்:புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

VIII புரட்சிக்கவிஞர், பாரதியாரின் கொள்கைகளிடத்தில் அன்பு பூண்டு வாழ்ந்து வந்தாரேயல்லாமல், பாரதியாருக்கு அடிமைப்பட்டு எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு நிலையிலும் வாழ்ந்ததில்லை. எவை மனிதனின் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பவை, எவையோ அவற்றையெல்லாம் 'அழகு' என்கிறோம்; அழகை வெளிப்படுத்துபவை எவை. எவையோ அவற்றையெல்லாம் 'கலை' என்கிறோம். இயற்கலை w இசைக்கலை கலைகள் நாடகக்கலை நாட்டியக்கலை கூத்துக்கலை சிற்பக்கலை ஓவியக்கலை ஒப்பனைக்கலை போன்றவைகளையெல்லாம் என்கிறோம். கலைகளிலெல்லாம் மிகச்சிறந்த கலையாக இயற்கலை (அதாவது இலக்கியக்கலை)யைத்தான் உலகு எங்கணும் உள்ள ஆன்றோரும். சான்றோரும் போற்றிப் புகழ்கின்றனர். மனிதனை மனிதனாக ஆக்கி, அவனைப் பண்படுத்திப், பயன்படவைப்பது. உயர்ந்து மேம்பட்டுச் சிறந்து விளங்கும் இலக்கியமேயாகும். - கதை இலக்கியக்கலைகள் என்று, கவிதை காவியம் கட்டுரை - நாடகம் என்ற வடிவுகளில் பல சொல்லப்பட்டாலும், அவைகளிலே கவிதைக் கலைக்குத்தான், தனிப்பெருஞ் சிறப்பு அளிக்கப்படுகிறது. அழகான பெண்ணொருத்தி இயல்பாக நடைபோட்டுச் செல்வதற்கும். அவளே நாட்டியமாடிக் கவர்வதற்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு. ஒருவர் பொதுவான உரைநடையில் ஒரு கருத்தைப் பேசுகின்ற பேச்சுக்கும், அவரே கவிதையில் அந்தக் கருத்தைப் பாடிக் காட்டுவதற்கும் இடையில் இருந்து வருகின்றது. மலர்களுக்குக் கதிரவனின் கதிர்கள் எவ்வாறு அழகான நிறங்களைக் கொடுக்கின்றனவோ, அது போன்று கவிஞனின் கற்பனைகள், கவிதைகளுக்குப் பொலிவு தருகின்றன. கவிஞர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் கொத்தனார்களாகக் காட்சியளிப்பவர்கள் பலராகவும், சிற்பிகளாக விளங்குபவர்கள் சிலராகவும் இருந்து வருகிறார்கள். செங்கற்களை அடுக்கிச் சுவர் எழுப்பும் கொத்தனாரின் திறமையைக் காட்டிலும், சிற்றுளி கொண்டு கருங்கல்லைச் செதுக்கிப் பதுமையை வடித்தெடுக்கும் சிற்பியின் திறமை பலவாறாகப் போற்றப்படுவதாகும். அது போன்றே, சிற்பி போன்று விளங்குகின்ற கவிஞர்களைத்தான், உயர்ந்தோர் போற்றிப் புகழ்ந்து, வாழ்த்தி வரவேற்றுப் பாராட்டுகிறார்கள். அந்த