புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
வரை அனைத்தும் , கருத்து - உணர்ச்சி - நகைச்சுவைகள் பொருந்தியிருப்பதைப் பாக்கக் காணலாம்.
நிலைத்த நெஞ்சினர்; நேர்மை அவர்தம் இயல்பு. அவருக்குச் சூழ்ச்சி தெரியாது உண்மை-உழைப்பு-மேதை. இவைகளுக்கு மத்தியில் எப்போதும் வீற்றிருப்பவர். "நான் செய்ய வேண்டியது என்னவென்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிர, பிறர் என்ன என்னுவார்கள் என்பதல்ல!" என்ற ஞானி எமர்ஸன் கருத்துத்தான் பாரதிதாசன் கருத்தும்.
பாரதிதாசன் தமிழ்க்கவிஞர்-தமிழர்களின் கவியாசர். தமிழின் மறுமலர்ச்சிக்காகத் தோன்றிய கவிஞர். தமிழர்களின் புகழ் மீண்டும் மேதினியெங்கும் ஒங்குவதற்காகப் பிறந்த உத்தமக் கவிஞர்.
கவிஞரைப் பார்த்தால், அவருக்கு ஐம்பத்தி எட்டு வயது என்று யாரும் கூறமுடியாது. பார்வைக்கு முப்பது வயதினராகவே தோன்றுவார்.
1920-ம் ஆண்டில் சத்தியாக்கிரஹ இயக்கத்தில் பங்கு எடுத்துக் கொண்டார்.
அரவிந்தர், வ. வெ. சு. ஐயர், பாரதியார், வ. உ. சி. ஆகியோரிடம் பல வருஷங்கள் நெருங்கிப் பழகியிருக்கிறார். பத்திரிகைத் துறையிலும் பாரதிதாசனுக்கு நல்ல அனுபவம் உண்டு. புதுவையிலிருந்து பல பத்திரிகைகள் வெளி-
10