கவிக்காளை
யிட்டுள்ளார். பத்திரிகை உலகிலே ஒரு புரட்சிகரமான புது முறையான "கவிதாமண்டலம்" என்ற பத்திரிகையை நடத்தினர். அந்தப் பத்திரிகை தலைப்பு முதல் இறுதிவரை எல்லாம் கவிதைமயம்தான்! கவிஞர் தம் முப்பதாம் வயதில் திருமதி பழநியம்மாளை மணம் புரிந்து கொண்டார்.
கவிஞருக்கு ஒரு செல்வனும், மூன்று செல்விகளும் உண்டு; கவிஞர் அவர்கள், கல்லூரியிலிருந்து ஒய்வுபெற்று (ரிடையர்டு ஆகி) இப்போது தமிழ்த் தொண்டு புரிந்துவருகிறார்.
2. கவிக்காளை
இளமையிலேயே, புலமை வளம் பெற்றது கவிஞர் பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதியார் அவர்களிடத்தில் புதுச்சேரி அரசாங்கக் கல்லூரித் தமிழ் ஆசிரியர் தேர்விலும் தம் பதினெட்டாம் வயதிலேயே புதுவையிலேயே முதன்மையாகத் தேறித் தம் புலமையைப் புலப்படுத்தினார்.
நம் கவிஞருக்கு, அரசாங்கத்தார் உடனே ஆசிரியப் பதவி அளித்து, முதன்முதலில் காரைக்காலுக்கு அடுத்துள்ள நெரவை என்ற கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் அமர்த்தினார்கள். முதல் நாள் கவிஞர் பள்ளிக்கூடத்துக் குச் செல்லுகிறார். அந்தப் பள்ளிக்கூடத்து மாணவர்கள் நம் 'கவிக்காளை'யைக் கண்டதும் "யார் இந்தப் புதுமாணவன்?" என்று கவிஞரோடு சென்ற ஒரு நண்பரிடம் கேட்டனர்.
11