பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்



பள்ளியில் வகுப்பு ஆரம்பமாயிற்று. பள்ளித் தலைவர், நம் கவிஞரை வகுப்புக்கு அழைத்து வந்து, "இவர்தான் உங்கள் புது ஆசிரியர்!" என்று அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான்; மாணவர்களின் நானத்தைப் பார்க்க முடியவில்லை! ஏன்? ஆசிரியருக்கு வயது பதினெட்டு மாணவர்களுக்கோ, பத்தொன்பது, இருபதுக்கு மேலிருந்தது.

3. புராணக்கூற்று

நம் கவிஞரின் வாழ்க்கையிலே நிரம்ப நகைச்சுவை உண்டு. அவருடைய நகைச்சுவையான கருத்துக்களையும் - இன்பமான கவிதைகளையும் ரசித்துக்கொண்டே வாழ்நாள் முழுதும் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

யாராயிருப்பினும், கவிதை எழுதும் தகுதியுடையவரோ அல்லாதவரோ, பாட்டு என்று எழுதிக் கொண்டு வந்து, திருத்திக் கொடுக்கச் சொன்னால், நம் கவியாசர் சிறிதும் வெறுப்பின்றி வந்தவர்களின் மனம் கோணாமல் திருத்திக் கொடுத்து விடுவார்.

சில தொணப்பர்களும், பழமைப்பித்தர்களும் எதையாவது எழுதிக்கொண்டுவந்து கொடுத்துத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். இத்தகையோரிடத்தில் கவியரசர் தம்முடைய நகைச்சுவையைக் காட்டிவிடுவார்.

ஒருவர், "காசியில் இறக்க முத்தி, கைலையில் பிறக்க முத்தி......” இப்படியாக மூன்று அடிகள் எழுதிக்கொண்டு


12