புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கிடைத்தது. 'அக்கா, அம்மா, சின்னப்பயல் (கவிஞர்) பழத்தையெல்லாம் தின்றுவிட்டுத் தோலை வைத்திருக்கான் பாரு' என்று பெரியம்மாவிடம் கண்ணீர் விட்டான். அப்பா விடமும் குற்றம் பதிவு செய்யப்படுவதை அறிந்த கவிஞர் நடந்தவற்றை ஒரு பாடலாக அமைத்து அவரிடம் கொடுத்தார். அப்பாவும் சின்னப்பயலின் நியாயத்தை ஒப்புக் கொண்டார். கவிஞருக்கு அப்போது வயது பதின்மூன்று அவர் அபபோது பாடிய பாடல் பின்வருமாறு:
பழங்கலத்திலே பழங்களைத்தான்
பார்த்துத்தேடி பயல்களைத்தான்
கிழங்களைத்தான் உதைக்க வேண்டும்.
கெடுநினைப்பே அதிகமப்பா
ஒழுங்குபட வாழைச்சீப்பில்
ஒன்று விழுக்காடு தந்தாள்;
விழுங்கிடவே அண்ணாவுக்கு
மீத்துக்கொடுக்க மறைப்பதென்ன?
5. குறும்பு
புதுவைக் கல்லூரியில் பலர் படித்து வந்தனர். அவர் களுடன் நமது கவிஞரும் ஒருவர். அவர்களில் இருவர் கவிஞருக்கு நெருங்கிய நண்பர்கள். ஒருவர் "பள்ளி" என்ற வகுப்பில் பிறந்தவர்; மற்றொருவர், "இடையர்" என்ற வகுப்பில் பிறந்தவர். பள்ளி இசை பயில விரும்பினார்.; கற்றுத்தருமாறு இடையரிடம் கேட்டுக் கொண்டார். அவரும் இசை பயிற்றுவிக்க இசைந்தார். முதலில் அவர்
14