பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

கம். அந்தச் சமயம் தெருவில் சிறுவர்கள் காற்றாடி'விட்டு விளையாடுவார்கள். ஒருநாள் இதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார் கவிஞர். ஒரு பையனின் காற்றாடிக்கு வால் போதவில்லை. உடனே அந்தப் பையன் தன் கோவணத்தைக் கிழித்து அந்தக் காற்றாடிக்கு வால் கட்டிப் பறக்க விட்டான். காற்றாடி உயரப் பறந்துகொண்டிருக்கையில் பக்கத்தில் இருந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள தங்கக் கலசத்தின் மீது அந்தக் கோவணம் சுற்றிக் கொண்டது. உடனே அந்தச் சிறுவன் பக்கத்திலுள்ள தன் தோழர்களிடம், என் கோவணம் தங்கக்கலசத்தின் மேல் சுற்றிக் கொண்டது பார்!’ என்று கூறிப் பெருமை அடைந்தான். இதற்கு ஒரு உவமை கூறுகிறார் நம் கவிஞர். அது எதற்குத் தெரியுமா? சொந்தமான நூல்கள் எதுவும் எழுத வகையறியாத சிலர், வேண்டாதவற்றை மொழி பெயர்த்தும், பழமையான நூல்களான, தொல்காப்பியம், திருக்குறள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பெரிய நூல்களில் "பதிப்பாசிரி யர்"என்ற முத்திரை போட்டும் வருகிருர்களல்லவா? அதற்குத்தான், எங் கோவணம் தங்கக் கலசத்தின்மேல்!" என்று கூறுகிறார் கவிஞர். எப்படி உவமை?

உவமையிலும் சிறந்த கருத்தை உணர்கிறோம்!

7. இரகசியம்

ஒரு சமயம் புதுச்சேரியிலுள்ள கடற்கரைக்கு ஐந்தாறு நண்பர்கள் சென்றார்கள். அவர்களில் நம் கவிஞரும்

6