பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தவிர, நிமிஷம் தவறாமல், சாப்பிட வாருங்கள்!-காபி குடியுங்கள்-சிறிது தூங்குங்கள்-பால் சாப்பிடுங்கள்' -:பலகாரங்கள் சாப்பிடுங்கள் இப்படியாக உபசரித்துக் கவிஞரைத் திக்குமுக்காட வைத்துவிடுவார். கவிஞர் பெரிய தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ளுவார். புராணக் கதைகளில் வரும் சிவபக்தர்கள் போல் இருக்கும் அந்த அன்பரின் பக்திப்பிரவாகம், அன்பர் சொல்வதையோ -செய்வதையோ, சிறிதேனும் கவிஞர் மறுத்தால், அன்பர் கண்களில் நீர் ததும்பிவிடும். இந்தப் பக்திக்குக் கட்டுப் பட்டு விடுவார் கவிஞர். ஒரு முறை அன்பர் வீட்டில் உண வுக்குப் பின் பேச்சு சுவாரஸ்யமாக நடைபெற்றது. ஏதோ பலப்பல பேச்சு வந்தது; அன்பைப் பார்த்துக் கவிஞர், 'உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்' என்றார் அன்பர். எட்டுக் குழந்தைகள் என்றார் அன்பர். உங்களுக்கு வயது எத்தனை' என்றார் கவிஞர். முப்பத்தி ஐந்து' என்றார் அன்பர். 'முப்பத்தி ஐந்து வயது-எட் டுக் குழந்தைகள்' என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டு, இனிமேல் கொஞ்சம் அடக்கமாகத்தானே இருங்கள்' என்றார். அவ்வளவுதான் எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. எவ்வளவு நயமாகக் கூறிவிட்டார் கவிஞர். கர்ப்பத்தடை! யைப் பற்றிக் கவிஞர் பாடியவ ரல்லவா?.

11. வியப்பு

கவிஞர் எந்த இடத்தில்-எப்படி சம்பாஷணைகள் செய்தாலும்-சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தாலும்

20