பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புரட்சி கவிஞர் பாரதிதாசன்


சிலரைக் கண்டால் கவிஞருக்கு எப்போதுமே ஒரு அலுப்பு ஏற்படும். ஏனென்றால் சிலர் உருப்படியான ஒரு காரியத்தையும் செய்வதில்லை; வயிற்றுப் பிழைப்பைக் கருதி எதையாவது செய்ய முற்படுவது—பிறகு அது கலைத்தொண்டு என்றெல்லாம் பிதற்றுவார்கள். இந்த மாதிரி விஷயங்கள் கவிஞருக்கு அறவே பிடிக்காது. அந்த மாதிரி ஆட்களிடம் கவிஞர் கிண்டலாகவே பேசுவார். கலைத்தொண்டர் ஒருவர் கவிஞரை ஒருநாள் காணவந்தார். “நான் இப்போது எங்கே இருக்கிறேன் தெரியுமா? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஒரு பெரிய மகாநாடு நடத்தப் போகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்” என்றெல்லாம் வீர தீரப் பிரதாபங்களை அளந்துவிட்டார். கவிஞர் அவற்றையெல்லாம் சாவதானமாகப் — பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, “நீ என்ன செய்தாலும் சரி, ஆகக் கூடி நீ வேலையில்லாமல் இருக்கிறாய் என்பதுமட்டும் தெரிகிறது. அதனால்தான் இந்த மகாநாடு எல்லாம்!” என்றார் கவிஞர். ‘கலைத்தொண்ட’ருக்கு வாயடைத்துவிட்டது; விளக்கெண்ணெய் வடியும் முகம்போல் ஆகிவிட்டது; பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “என்ன என்னையெல்லாம் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்” என்றார் ‘கலைத் தொண்டர்’.

13. மறதி

கவிஞர் பாரதிதாசனுக்கு மறதி அதிகம். இதை எண்ணினாலே சிரிப்புத்தான் அதிகம் வரும். கவிஞர் ஏதா-


22