பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மறதி

வது எழுதிவிட்டோ, அல்லது யாருடனாவது பேசிக்கொண் டிருந்த பிறகோ ஸ்நானம் செய்யப் போவார். அப்போது கண்ணில் கண்ணாடி இருப்பதை மறந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளுவார். பிறகு கண்ணாடி ஞாபகம் வரும்; கழற்றி வைப்பார்.

எப்பொழுதும் எதிலும் கவனம் செலுத்தக் தொடங்கினால் பிறவற்றில் கவனம் செலுத்தமாட்டார். உணவு நேரம் வந்தாலும் சரி,அதில் ஞாபகம் இருக்காது. அம்மா வந்து நீங்கள் சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கக் கூடாதா? வெகுநேரம் ஆகிவிட்டதே' என்று சொல்லிய பிறகுதான் உணவு ஞாபகம் வரும். பாண்டியன் பரிசு’ காவியம் தயாராகிக் கொண்டிருக்கும் சமயம் அது. சிகரெட் இடைவிடாது புகைத்துக் கொண்டே இருப் பார். சில சமயம் தீவிர சிந்தனையிலாழ்ந்து விட்டால் ஒன் றுமே தெரியாது. இதற்கு உதாரணம்: ஒரு சமயம் வாயில், சிகரெட் இருப்பதாக எண்ணிக் கொண்டு, பற்றவைக்க தீக்குச்சியை வாயின் அருகில் கொண்டு போனார். பிறகு, ஓ! சிகரெட்டே எடுக்கவில்லையோ' என்று நினைவு படுத்திக் கொண்டு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார். இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அநேகம். இவைகளையெல்லாம் நான் பலமுறை நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன். இவற்றை எழுத்தில் எவ்வளவு தாம் உருவகம் செய்து காட்டமுடி யும் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.

28