இந்த பக்கமானது இருமுறையுள்ளதால்,
இதனை மெய்ப்புச்செய்ய வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
(இருப்பினும், ஒரு முறை சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்)
காண்க:
பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/31
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின்பெருக்கே i என் செந்தமிழே ! கண்ணுறங்கு
என்றார் மற்றும் பெண் குழந்தையைத் தாலாட்டுகை
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடுமணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டுவெளுப்பதற்குக்
தூண்டா விளக்காய்த் துலங்கும்பெருமாட்டி !
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தை
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே !
என்று பாடுகிறார் இனிக் கவிஞரின் உலக ஒற்றுமை காண்போம்.
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளக் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றுார் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை புள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனதுநாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல் :
இன்பம் எல்லாருக்கும் என்று பேரிகை முழக்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று தம் கவிதையின் மூலமாக முழக்குகிறார்.
தமிழ் நாட்டிற்குப் பாரதிதாசன்தான் இனி பாரதி.
30