பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்கு பேத சுயமரியாதை உலகு எனப் போவைப்போம்

ஈதேகாண் சமூகமே யான் சொன்னவழியில் ஏறு நீ !ஏறு நீ!! ஏறு நீ !!! ஏறே !


(2) அண்டுபவர் அண்டாத வகைசெய்கின்ற அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ ?


கொண்டுவிட்டோம் பேரறிவு பெருஞ் செயல்கள் கொழித்துவிட்டோம் என்றிங்கே கூறுவார்கள்,


பண்டொழிந்த புத்தன், ராமாநுஜன், முகம்மது கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச் சண்டையிடும் அறியாமை அறிந்தாரில்லை சமூகமே ஏறு! எம்கொள்கைக்கே !


மேலே கண்ட பாட்டில், நாட்டின் நன்மைக்கு ஏற்ற அன்பு நெறி-பகுத்தறிவு என்னும் அருமையான கருத்துக்கள் மிளிர்கின்றன. மதத்தின் பெயரால் மக்களை வதைக்க வேண்டாம் எனக் கதறுகிறார் கவிஞர். கவிஞர் குழந்தைகளைத் தாலாட்டுகிறார்-பாடுகிறார். புரட்சி எண்ணத்தைப் பரப்புகிறார்.


'எல்லாம் அவன்செயலே' என்று பிறர்பொருளை

வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்,

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்

வேர்ப்பீர் உழைப்பீர் என உரைக்கும் வீணருக்கும்,

29