இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒளியாய் விளங்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறுகளில் சில ருசிகரமான நிகழ்ச்சிகளைத் தாம் நேரில் கண்டறிந்தவாறு மிக்க இனிய எளிய நடையில் எழுதி உதவியிருக்கின்றார்.
அவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு பல காலம் நெருங்கிருப் பழகியவராதலால், அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சில ருசிகரமான நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுவதற்கு அவர் மிக்க பொருத்தமானவரே. அவர் எழுதிய, இந்தச் சிறிய நூலைத் தமிழுலகம் வரவேற்குமென்று நம்புகின்றோம்.
முத்தமிழ் நிலையத்தார்,
சென்னை-1.