பக்கம்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கையிலே.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை


 தைச் சேர்ந்த கனக-சுப்புரத்தினம் எழுதியது” என்றெழுதப்பட்டுச் 'சுதேச மித்திரன்’ இதழுக்கு அனுப்பப்பட்டது.

பாரதியாரிடம் சுமார் பத்து ஆண்டுகளுக்குமேல் பாரதிதாசன் பழகியிருக்கிறார். பாரதியாரின் அற்புத வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பாரதிதாசன் வாயிலாகக் கேட்டு மகிழாதவர் இல்லை.


பாரதிதாசன் அவர்கள் தொடக்கத்திலிருந்தே, சாதி பேதத்தையும், சமயபேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும், விரிந்த அறிவும், கொள்கைக்குப் போராடும் குணமும் கொண்டவர்.

பாரதிதாசன் அவர்கள், அந்தக் காலத்தில் கதரைப் பற்றிய பிரசாரப்பாட்டுக்களே மிக அற்புதமாகப் பாடி இருக்கிறார்.

கவிஞர் பாடிய "சுப்பிரமணியர் துதியமுது" என்ற நூலில் உள்ள 'கீர்த்தனைகள்', கீர்த்தனாசிரியர்களுக்கும் வழிகாட்டக் கூடியன.

பாரதிதாசன் பாடல்கள் சிலவற்றைப், பாதியாரின் பாடல் என்றே பல நண்பர்களால்-பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதும் உண்டு.

பாரதிதாசன் அவர்கள் நிரம்ப நகைச்சுவை நிரம்பியவர். அவரது சிறு குறிப்பு முதல் கட்டுரை, கவிதைகள்