பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியம் கவிதை என்ற பெயரைப் பெறுகிறது. அத்துடன் அது காலத்தை வென்று வ ா ழு ம் இயல்பினையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. புதுவைக்குயில்புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் இவ் விலக்கியக் கூறுகள் செறிவாக அமைந்துள்ளன. எனவே அவருடைய கவிதைகள் கால வெள்ளத்தை வெற்றி கொள்ளுதல் திண்ணம். நிலைபேற்றுத் தன்மைக்கான இலக்கியக் கூறுகளாக உணர்ச்சி, கற்பனை, கருத்து. வடிவம் ஆகியவற்றோடு உவமை, உருவகம், வருணனை, சொல்லாட்சி ஆகியனவும் பாவேந்தரின் பாடல்களில் பளிச்சிடுகின்றன. இனி அவற்றை நோக்கலாம். உணர்ச்சி புறநானூற்றுப் புலவரின் புதிய வாரிசாகப் புரட்சிக் கவிஞரைக் கருதலாம். வீரத்தின் விளைநிலமாய் விளங்கிய பண்டைய தமிழகத்தின் பின்னணியை நன்குணர்ந்த பாரதிதாசன் வீரவுணர்வு மிக்கோராய் விளங்கினார். நேரிய நோக்கும் நிமிர்ந்த தோற்றமும் கொண்ட கவிஞர் தமிழர் வாழ்வு, தமிழ்மொழியின் வாழ்வை ஒட்டி அமைகின்றது என்பதை உணர்த்த எழுச்சிக் கவிதைகள் பலவற்றை எழுதினார். அவற்றில் உணர்ச்சி வெள்ளம் கட்டுக்கடங்காது பாய்வதைக் காணமுடிகிறது. தமிழினம் தாழ்த்தப்படுவதை, அடிமைப்படுத்தப்படுவதைப் பொறுக்க வியலாது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல் செய்யப் புறப்படு வெளியில் நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகை விரி! எழு! சிங்க இளைஞனே திரும்புமுகம்! திறவிழி!