பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 99. இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப் பொய் விரித்துகம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார் எனில் வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!" என்று தங்கத் தமிழ் இளைஞனுக்கு வீரவுணர்வூட்டி அவனைச் சிங்க ஏறாகச் சிலிர்த்திடச் செய்கிறார் பாவேந்தர். மொழி இன மானம் காப்பதில் கவிஞர் கைக்கொண்டிருந்த கொள்கை வீரச்சுவையாக - வீர உணர்ச்சியாக வெளிப்படுகின்றது. நின்மகன் யாண்டுளன் என வினவியவனுக்கு விடையாக தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே என்று கூறிய மறப்பெண்ணையும், தந்தை கணவன் இருவரையும் போரில் இழந்த பிறகும் ஒரே மகனைப் போர்க்களம் அனுப்பிய மறக்குல மங்கையையும் கவிஞர், தம் மணக்கண் முன்னர்க் கொணர்ந்ததன் விளைவே வீரத்தாய்' என்னும் காவியம். இதன்கண் மணிபுரி நாட்டுப் பட்டத்தரசி விசயராணியைக் கவிஞர் வீரத்திருவாய்ப் படைத்திருக் கிறார். வஞ்சகமாக நாட்டைக் கவர எண் னிய சேனாபதி. காங்கேயனை வாட்போரில் வெற்றி கொள்கிறாள் விசய ராணி. அவள் கிழவர் வேடம்பூண்டு தன் மகனுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கின்றாள். மகன் சுதர்மன் கலை களில் தேர்ச்சி பெற்று நாட்டையாளும் பக்குவத்தை எய்து கின்றான். இதற்கிடையில் தனக்கே முடிசூட்டுமாறு காங்கேயன் பல நாட்டு மன்னர்களை வேண்டுகின்றான்; அவர்களை அழைத்து வருகின்றான். ஆனால் உண்மை நிலை தெரிய வருகின்றது. கிழவர் வேடம் பூண்ட விசய ராணி பல நாட்டு மன்னர்களும் கூடியுள்ள அவையில் காங்கேயனின் கொடுமனத்தை விளக்கியுரைக்கின்றாள்.