பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

00) புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தாடியும் பொய்! என்றன் தலைப்பாகையும் பொய்யே! குடியுள்ள அங்கியும் பொய்! கொண்ட முதுமையும் பொய்! நான் விசயராணி! நகைக்கப் புவியினிலே ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கில்லான்! கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருங்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப் புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்! " இது விசயராணியின் மதி நுட்பத்திற்கும், வீரப் பண்பிற்கும் சான்றாகும் பகுதியாகும். ஆமைபோல் அடங்கி ஒடுங்கி வாழுபவர்கள்தாம் பெண்கள் என்னும் மூடக் கொள்கையை ஒரு பெண் ணின் வாயிலாகவே பொய்யாக்கி யுள்ளார் கவிஞர். அவர் பெண்ணுரிமைச் சிந்தனையை உணர்ச்சிகரமாக வெளியிட்டுள்ள பாங்கினைக் காண முடிகிறது. இருக்கும் கிலை மாற்ற ஒரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம் என எழுத்தாளரின் கடமையைத் தெளிவுபடுத்திய கவிஞர் அவர்களுக்கு வேண்டுகோள் சிலவற்றை விடுக்கிறார் பொதுமக்கள் நலம் நாடிப் புதுக்கருத்தைச் சொல்க! புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால் எதிப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை? ஏற்றசெயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும் உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள் நன்றே உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும்." என்பது கவிஞரின் விழைவு. புதுக்கருத்தைச் சொல்ல வேண்டும், பொருளுக்காகப் பொய்க்கருத்தை, புன்கருத்