பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 101. தைக் கூறாதீர், தமிழர் மேன்மையைக் குலைக்கும் ஏடு களை எதிர்த்துச் செயலாற்ற வேண்டும்; அஞ்சாமை எனும் உணர்வை நெஞ்சில் நிறுத்திச் செயல் படுக. அவ்வாறு செய்வதால் பொன்னனைய கருத்து மலர்கள் எங்கும் பரவி புதுமணத்தை நிரப்பும் என்ற கருத்தை விழுமிய உணர்ச்சி வெளிப்படும் வண்ணம் இழுமென் மொழியால் இயம்புகின்றார். தமிழின எழுச்சியை, பெண்ணுரிமையை, எழுத்தாளர் கடமையை வீரவுணர்வோடு பாடிய கவிஞர் காதல் உணர் வையும் கனிவாகப் பாடியுள்ளார். காதலுணர்ச்சி ஒசை நயமுடன் வெளிப்பட்டுப் பயில்வோர் உள்ளங்களில் ஆழ. மாகச் சென்று படிகிறது. தன் நெஞ்சம் நிறைந்த காதலனைக் காணாத காதலியின் உணர்வைத் துல்லிய மாகக் கணக்கிட்டு அதனைச் சொற்சித்திரமாக வடிக் கின்றார் பாவேந்தர். வாராத நாளெல்லாம் (நான் ) வாழாத நாள் -அத்தான் வாராத நாளெல்லாம் வந்திட்டால் காண்பேனிங்கே சந்தனச் சோலையைத்தான் - வாராத நாளெல்லாம் தீராத காதல் கோயை ஓர் நொடியில் தீர்த்திடுவான் செந்தமிழில் பேசிப்பேசித் தேன் கவிதை சேர்த்திடுவான் பாராத நாள் எல்லாம் பாழான நாள் அத்தானைப் - பார்க்கும் நாள் ஒவ்வொன்றும் தைப்பொங்கல் நாள், ! காதலியின் எண்ண ஓட்டத்தை விளக்கும் எழுத்துப்படம் இது. காதலனுடன் காதலி இருக்கும்போது அவர் களிடையே நடைபெறும் நிகழ்ச்சியையும், காதலி அதனால் பெறும் மகிழ்ச்சியினையும், அவன் வாராதபோது அவளது துயர நிலையையும் கவிஞர் கலையழகு மிளிர, உணர்ச்சி ஆடை சலசல எனப் பயில்வோர் மாட்டுப் பாயும் வண்ணம் பாடிய பாங்கு போற்றுதற்குரியது. காதலனைப் பாராத நாள் பாழான நாள்; அவனைப் பார்க்கும் நாள்