பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*102 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஒவ்வொன்றும் தைப்பொங்கல் நாள் என்ற கருத்து, சீரிய கற்பனையின் விளைவாகும். தமிழரின் விழாக்களுள் பொங்கலைப் பெரிதும் விரும்பியவர் கவிஞர். அதனை ஏற்ற இடத்தில் ஏற்றவாறெல்லாம் சிறப்புற எடுத்தியம் புதல் அவரது இயல்பு. தமிழிலக்கியங்களில் இரு சுடர்களாகிய ஞாயிறு, திங்கள் ஆகியன விரிவாக எடுத்தோதப்பட்டுள்ளன. திங்களைப் பாடாத கவிஞர் இல்லை எனலாம். கவிஞரின் கற்பனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் திங்கள் சிறப்பிக்கப் படுகிறது. காதலனைப் பிரிந்த காதலிக்கு அது தணலாய்ச் சுடுகிறது. கவிஞர்களுக்கு இனிமை பயக்கிறது; கம்பருக்குத் தருமத்தின் வதனமாகப் பொலிகிறது. இப்படிக் கவிஞர் களின் கற்பனைக்கேற்பக் கவினுறச் சித்திரிக்கப்படும் நிலவைப் பாவேந்தர் பாரதிதாசன், சுமை சுமையாய் உவப்பெடுக்க, உணர்வுவெள்ளம் துாண்டிவிடப்" பாடுகின்றார். அவர் பார்வைக்குப் பசியின்றி உழைத்த மக்கள் நினைவுக்கு வருகின்றனர். அவர்கள் கூழுக்காக அலைகின்றனர்; அப்போது வெண்சோறு நிறைந்த பானை யைக் காணுகின்றனர். அவர்கள் முகம் மலர்கின்றது. அந்த மலர்ச்சியை நிலவைக் கண்டவுடன் பெறுகிறார் கவிஞர். உனைக் காணும் போதினிலே என்னுளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவ தில்லை நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத் துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்கிலவே உனைக்காணும் இன்பம் தானோ!