பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 103 உணர்ச்சி நிலையில் மூழ்கிய கவிஞர் தமது உள்ளத் துணர்வை வெளிப்படுத்த வார்த்தை கிடைக்கவில்லை என்று கூறுகிறார். எனினும் அதனை அவர் வெளிப் படுத்திய பாங்கில் உணர்ச்சி வெள்ளம் வழிந்தோடக் காண்கிறோம். கவிஞரின் சீரிய சமூக உணர்வு இப்பாடற் பகுதியில் உரக்க ஒலிக்கின்றது. வறுமை நிலையிலிருந்து விடுபட்ட உள்ளம் பெறும் உவகை உணர்ச்சியைப் பாரதி தாசன் இப்பாடலில் புலப்படுத்தியுள்ளார். பெருமித உணர்வைப் பாடுவதிலும் கவிஞர் வல்லவ ராய்த் திகழ்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பணியைப் பாராட்டிக் கூறும்போது, காய்ப்பு நாளின் முன் காய்த்துப் பழுத்த மாங் தோப்புப் போன்ற துாய்கழகத்தாய் அதற்குள் எத்தனை ஆயிரம் அறிஞரை எத்தனை ஆயிரம் முத்தமிழ்ப் புலவரை ஈன்று புரந்தந்தாள்! ஈடெடுப்பில்லா எழுத்தாளர்களை - எத்தனை பேர்களை அளித்தாள்! - பொருளின் பெற்றி ஆயுநர் தமிழிசை வல்லுநர் அமிழ்தப் பாவலர் இந்தா இந்தா - என்று தந்தாள் ஒரு நூற்றாண்டில் தரத்தகு பயனைக் கால் நூற்றாண்டில் தந்தது கழகம்' " எனப் போற்றுகின்றார். வெள்ளிவிழாக் காணும் பல்கலைக் கழகம் ஒரு நூற்றாண்டில் செய்ய வேண்டிய பணியை இருபத்தைந்தே ஆண்டுகளில் செய்துவிட்டதை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றார் கவிஞர். அப்பெருமிதம் இப்பாடலில் படிந்துள்ளமை நோக்குதற்குரியது. அறிஞர், புலவர், ஆய்வாளர், பாவலர் என்றிவர்களை ஆயிரக் கணக்கில் இந்தா இந்தா என்று தந்த தாகக் கூறுகையில் அவர் உள்ளத்தில் ஊறும் உணர்ச்சிப் பெருக்கை நாம் உணர முடிகிறது; அவர் கொண்ட அதே உணர்ச்சியை நாமும்