பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
105

பயன் இல்லை;ஏன் பூத்தாய்? என வினவுகின்றார்.அவரது வினாவிற்கு அடிப்படை அவல உணர்வு என்பது நினைதற்குரியது. சீவகசிந்தாமணியில் காட்டிலே பிறந்த சீவகனை எண்ணிக் கலங்கும் தாயின் நிலையைத் திருத்தக்க தேவர் பாடுகையில்,

வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் லிளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டுயரரங்கின் நிழல் போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகைகுழறிப் பாராட்ட
இவ்வாறாகிப் பிறப்பதுவோ இதுவோ மன்னர்க்கியல் வேந்தே14

என ஆற்றாமை உணர்வை - அவல உணர்வைத் தோற்றுவிக்கிறார். மன்னன் மகனுக்குநேர்ந்த நிலையைத் துயர உணர்வு பெருகுமாறு நீண்ட ஓசையைத் தரும் சொற்களின் வாயிலாகச் சுட்டுகிறார். இத்தகைய கவிதைகள் தமிழில் நிரம்ப உள்ளன; காலந்தோறும் பற்பல கவிஞர்களால் பாடப்பட்டுள்ளன பாவேந்தரும் அவல உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள் பல புனைந்துள்ளார். அவற்றுள் காதற் பிரிவால் நேரும் அவலம் இன்றியமையாததாகும் தன்னுடைய காதலன் இறந்து விட்டான் என்பதை அறிந்த காதலி தனக்கேற்பட்ட துயரத்தை ,

இருப்பீர் என்றிருந்தேனே
இறந்தீரே அத்தானே
ஒரு பானை வெண்ணெயும் கவிழ்ந்ததோ
உண்ணவே அணைத்தகை அவிழ்ந்ததோ
வெண்ணெய் படும் நேரத்திலே
தாழி உடைந்திட் டதுவோ
கண்ணொளியை இழந்தேனே அத்தானே
காவலற்ற பயிரானேன் அத்தானே

பா-7