பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கண்ணுக்கு மையானிர் கார்குழலில் பூவானிர் மண்ணாகிப் போனதுவே என் வாழ்வு மறப்பினும் மறக்கவில்லை உம் சேர்க்கை 3 எனப் பாடுகின்றாள். காவலற்ற பயிரானேன் என்னும் தொடர் நெஞ்சைப் பிழியும் துயர உணர்வைத் தோற்றவிக் கின்றது. அது போன்றே கண்ணுக்கு மையானிர், கார்குழலில் பூவானிர் என்பன அவர்களது வாழ்க்கை முறையை, அன்புப் பிணைப்பை விளக்கி நிற்கின்றன. அத்தகைய அன்புடையோரிடையே ஏற்படும் பிரிவு அவர்களது வாழ்க்கையை மண்ணாக்கி விடுகிறது. துயரச் சுவையைக் கூட்டும் நீண்ட சீர்களால் இப்பாடல், அமைக்கட்டுள்ளமையும், அஃது உணர்ச்சிச் சூழலுக்குள் அமிழ்த்துவதையும் காணலாம். ஆதரவாய் நின்று அன்பு மொழிபேசி அரவணைத்த காதலன் இல்லாததை எண்ணிக் கலங்கும் காதலியைக் கவிஞர் நமக்குக் காட்டுகிறார். அவள் தன் நிலையை எண்ணி வருந்துவதை அழகிய சொல்லோவியம் மூலம் உணர்த்துகிறார். சூடாத மலரானேன் தோயாத புனலானேன், கான் சூடாத மலரானேன் ஆடாத அரங்கானேன் அன்பனில்லை என்பதனால் சூடாத மலரானேன் தமிழற்ற நாடானேன் தலையற்ற உடலானேன் கமழ்வற்ற பொழிலானேன் காதலனில் லாததினால் சூடாத மலரானேன்