பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 107 மிழற்றாத யாழானேன் வேண்டாத குழலானேன் அழைக்காத விருந்தானேன் அழகனில்லை ஆதலினால் சூடாத மலரானேன் மழை பெற்ற பயிர்போலே மதி பெற்ற வான் போலே அழகுற்று வாழ்வேனோ அவன் கல்கும் இன்பமுற்று? சூடாத மலரானேன். : உலகப் படைப்புகள் அனைத்தும் பயன்பாட்டு நோக்கின் அடிப்படையில் மதிப்பும், சிறப்பும் அடைகின்றன. பயன்படாத பொருள்களைப் பற்றி அக்கறை கொள்வோர் இல்லை. பயன்படாத பொருள் உலகில் இருப்பதுவும் மறைவதும் ஒன்றே. தலையற்ற உடல், ஆடாத அரங்கு, மிழற்றாத யாழ் ஆகியவை ஒரு பொருளாகவே மதிக்கப் படுவதில்லை. இந்தப் பயன்பாட்டுத் தன்மையை இழந்து நிற்கிறாள் ஒரு தலைவி. அதற்குக் காரணம் அவளது தலைவன் இல்லாமையே. தலைவியைப் பொறுத்த மட்டில் தலைவனுக்கே அவள் உரியவள். தான் அவனுக்குப் பயன்படாது வாளா உயிர் வாழ்தலில் பொருள் இல்லை என்பதை உணர்ந்த அவளின் துன்பமே இங்குப் பகட்டாகப் பரிணமித்தது. காதல் ஏக்கம் துயரத்தை ஏற்படுத்து கிறது. துயரம் அவலமாக மாறிப் பயில்வோரின் உணர்வினுள் ஊடுருவுகின்றது. இப்பாடல் அவலச் சுவையின் - உணர்வின் தன்மையைக் காட்டும் கலைத் தன்மையோடு இலங்குகிறது. வீரம், பெருமிதம், உவகை, அவலம் எனப் பல சுவை களைப்பாடிய கவிஞர் நகையையும் நயமாக நவின்றுள்ளார். சிரிக்கத் தெரிந்தவன் சிந்திக்கத் தெரிந்தவனாகக் கருதப் படுகிறான்.