பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முன்னுரை பாரதம் அந்நியர் ஆட்சியால் அல்லலுற்ற நேரம் அது. பல தலைவர்கள் தாய்த் திருநாட்டின் அடிமைத்தளையை அகற்ற அயராது பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமும் கூட. பாவலர்களும் நாவலர்களும் ஆர்வலராய் உழைத்த காலமும் கூட. கார்கால மேகத்தில் குளிர்நிலா மறைந்ததைப் போன்று, அமரர் பாரதியார் புதுவை நகரில் உறைந்து அந்நியர் ஆட்சிக்கு எதிராகக் கந்தகக் கவிதை களை எழுதித் தள்ளினார். தமிழகத்தின் தலைசிறந்த கவிக்கோமானாய் வாழ்ந்திருக்க வேண்டிய அவரை ஆங்கிலேயர் ஆட்சி புதுவையில் சில காலம் தங்கச் செய்தது. அவ்வாறு அவர் புதுவையிலே வாழ்ந்திருந்த காலத்தில் தமிழின் பேரேட்டில் புதிய வரவொன்று பதிந்தது. அவ்வரவு புரட்சிப் புயலாய், பூகம்பமாய், புது வெள்ளமாய்ப் பின்னாளில் உருமாற்றம் பெற்றது. பாரதியார் புதுச்சேரியிலிருந்த இலக்கிய அன்பர் வேணு (வல்லூறு) நாயகர் வீட்டுத் திருமணத்திற்குச் சென் றிருந்தார். திருமண விருந்து முடிந்து அனைவரும் மகிழ்ச்சி யோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ஒருவர், அங்கிருந்த பதினெட்டு வயது இளைஞரைப் பார்த்துப்