பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சிரிப்பென்ற ஒன்று சிறிதளவும் இன்றேல் பொறுக்காது இந்த உலகு. என்னும் புதுக் குறள் ஈண்டு எண்ணத்தக்கது. மனிதன் மட்டுமே சிரிக்கும் பக்குவமுடையவன் என்பது அறிஞர் களின் கருத்து. ஆனால் சில இலக்கியவாதிகளுக்கு அனைத்து உயிர்களும் சிரிக்கும் உயிர்களாகத் தோன்று கிள்றன. எனவேதான், அத்திமுதல் எறும்புவரை ஆனவுயிர் அத்தனையும் சித்தம் கனிந்து சிரிக்குதடா தேசிகா என்று ஒரு புலவர் பாடியுள்ளார். பொதுவாக நகைச் சுவை மனிதனின் பணிச்சுமைகளைக் குறைக்கின்றது; மனச்சோர்வை நீக்குகின்றது; அத்துடன் சிறந்த சிந்தனை யாற்றலைப் பெறவும் வழிகோலுகிறது. நகைச்சுவையின் இந்தத் தன்மைகள் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் களில் பாங்குறப் பயின்று வந்துள்ளமை நோக்குதற்குரியது. குடும்ப விளக்கில், ஊருக்குச் சென்று திரும்பிய தன் மாமியார் நிறையப் பொருள்களோடு வண்டியில் வந்திறங்கு கிறாள். வண்டியின் உட்புறம் ஏராளமான பொருள்கள் இடமில்லாத காரணத்தால் நெருக்கி வைக்கப்பட்டிருக் கின்றன. மாமியார் மிகவும் கடினப்பட்டு உட்கார்ந்த நிலையைக் கண்ட மருமகள் நீங்கள் எப்படி இந்த வண்டியில் அமர்ந்து வந்தீர்கள்' என வினவுகிறாள். அதற்கு, இவைகளின் உச்சிமீதில் குன்று மேல் குரங்குபோல என்றனைக் குந்தவைத்தார் என் தலை நிமிர, வண்டி மூடிமேல் பொத்தலிட்டார் உன்மாமன் நடந்து வந்தார் ஊரெல்லாம் சிரித்தது'