பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 109 என்று மாமியார் விடையிறுக்கிறாள். இப்பகுதியில் மாமியாரின் வாயிலாக நகைச்சுவையின்பத்தைக் கவிஞர் ஊட்டுகிறார். குன்றுமேல் குரங்கு எனும் உருவகம் நகைப்பை விளைவிக்கிறது. வண்டியின் மூடிமேல் பொத்த லிட்ட நிகழ்ச்சியை நினைக்கையில் சிரிப்பொலி பெருகுதல் திண்ணம். f பாவேந்தரின் நகைச்சுவைப் பாங்கை நன்கு விளக்கும் பகுதி அவரது இருண்ட வீடு' என்னும் சிறு கவிதை நூல். கல்வி அறிவில்லாக் குடும்பம் இருண்டவீடு எனப்பட்டது. கல்வி இல்லையேல்; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக் குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கி யிருக்கிறேன்" - என்று கவிஞர் இந்நூலின் முகப்பில் அளிக்கும் விளக்கம் பாடுபொருளைக் குறிப்பாகச் சுட்டி நிற்கிறது. முறையான கல்வி கற்காததால் வாழ்க்கையின் ஒழுங்குமுறைகளை தெரியாது போகலாம். இருண்ட வீட்டில் அந்தக் குடும்பத் தினர் அனைவரும் வாழ்க்கை முறைகளை அறியாதவர் களாய்ப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களது செயல் களைக் கவிஞர் குறிப்பிடும்போது சிரிப்பு வெடித்துக் கிளம்புகின்றது. சான்றாக இருண்ட வீட்டின் பெரிய பையனின் செயலைக் காணலாம். அவன் காலையில் எழுந்து காலைக்கடன்களை முடிக்காமல் உணவுண்ணச் செல்கிறான். உண்ணத் தொடங்கியவுடன் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை ஆசிரியர் பின்வருமாறு பாடுகிறார். நாவில் இடுகையில் நடுவயிறு வலித்தது வெளிக்குப் போக வேண்டுமென்றுணர்ந்தான் வடையின் சுவையோ விடேன் விடேன் என்றது கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான் மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்