பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வில்லம்பு போல மிகவிரைவாக நடுவிற் கிடந்த நாயை மிதித்துப் படபடவென்று பானையைத் தள்ளிக் கன்றின் கயிற்றால் கால் தடுக்குற்று நின்ற பசுவின் நெற்றியில் மோதி இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப் புரண்டேழுந்தோடிப் போனான் கொல்லைக்கு! " பையனின் அவசரத்தையும் அவதியையும் நகைச்சுவை மிளிரக் கவிஞர் கூறுகின்றார். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல விரைவாகச் சென்ற பையன் நாயை மிதித்ததும், பானையைத் தள்ளியதும், கயிறு தடுக்கி வீழ்ந்ததும் பசுவிடம் மோதுண்டதும் பற்களை இழந்ததும் நகையின்பம் விளைக்கும் வண்ணம் உணர்ச்சியுடன் பாடப் பட்டுள்ளன. இது போன்றே, மனைவிக்குத் தெரியாமல் மற்றொரு பெண்ணிடம் உறவு கொண்டிருந்த கந்தன் என்பவனின் நிலையை நகைச்சுவைபடச் சித்திரிக்கும் பாங்கு குறிப்பிடத் தக்கது. திரைப்படத்திற்குச் செல்கிறேன் என்று பொய் கூறிவிட்டுக் கந்தன் வேறொரு மங்கை வரச்சொன்ன இடத்திற்குச் செல்ல முற்படும்போது அவனுக்குப் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளை நகையுணர்வு தோன்றப் பாவேந்தர் குறிப்பிடுகின்றார். கண்ணான மனைவியிடம் திரைப்படம் பார்த்திடக் கருதினேன் என்று புளுகிக் கந்தனோ ஒரு மங்கை வரச்சொன்ன நள்ளிருள் வரும்வரை அழகியதிரு வண்ணாமலைத் திருக்குளப்படி மலக்கழிவில் அமிழ்ந்தே பதுங்கி, நேரம் ஆனபின் விரைவினிற் போனதோர் போக்கிலே ஆலமரவேர் தடுக்கப்