பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 111 புண்ணான காலையும் எண்ணாமல் முள்ளொன்று பொத்தலும் வாங்காமல் மேல் புளியங் கிளையொன்று துளையிட்ட நெற்றியிற் போட்டகை போட்டவண்ணம் வண்ணான் பெருங்கழுதை மேல் விழுந்துதையுண்டு தோட்டவாயிற் சேர்ந்தனன் வள்ளென்றதொரு நாய் தன் உள்ளங் கலங்கினன் வந்து வீழ்ந்தனன் வீட்டிலே. இதன்கண், இருட்டில் மறைந்திருத்த இடம், ஆலமரவேர் தடுத்ததால் காலில் ஏற்பட்ட புண், முள் குத்துதல், புளியங்கிளை நெற்றியைக் காயப்படுத்துதல், வண்ணான் கழுதை மேல் விழுந்து உதைபடல், நாயால் குரைக்கப்படல் ஆகியன வரிசையாகக் கூறப்பட்டிருக்கும் முறை நகைச் சுவையை அளிக்கின்றது. அத்துடன் அயன் மனை உறவு கொள்வதால் ஏற்படும் இழிநிலையைச் சுட்டிக்காட்டி உண்மையான இல்லறத்தை மேற்கொள்ளுமாறு குறிப்பாக உணர்த்துகின்றார் கவிஞர். நல்லமுத்துக் கதையில் விரசலூர் வெள்ளையப்பன் என்பவன் அரசலூர் அம்மாக்கண்ணு என்பவளின் வீட்டில் தங்கி தனது மனைவி, மகனைப் பற்றிக் கவலை கொள்ளா திருக்கிறான். அம்மாக்கண்ணுவை ஆசைநாயகியாகக் கொண்டதால் அவளுடைய பேச்சுக்கெல்லாம் இணங்கு கிறான். இந்நிலையில் அம்மாக்கண்ணு அவனைப்பற்றிக் குறிப்பிடும் சொற்கள் நகைச்சுவை உணர்ச்சியை அளிக்கின்றன. பூனை உருட்டும் பானையை அவ்வொலி நீங்கள் வரும் ஒலி என்று நினைப்பேன் தெருங்ாய் குரைக்கும் வருகின்றாரோ என்று நினைப்பேன் ஏமாந்து போவேன் கழுதை கத்தும்; கனைத்தீர் என்று எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன்