பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உம்மைஎப் போதும் உள்ளத்தில் வைத்ததால் அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள் சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள் விடும் நீங்கள் மாடும் நீங்கள் திகைப்படைந்து தெருவிற் போனால் மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள் எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும். ? என்ற அம்மாக் கண்ணுவின் கூற்று, பொருத்தமற்றவற்றை நோக்கும்போது நமக்குத் தோன்றும் விளையாட்டுத் தன்மை சார்ந்த சிரிப்பினைப் போன்ற சிரிப்பை உண்டாக்குகிறது. அடுத்து, பாவேந்தர் படைத்துள்ள கதைமாந்தர் களுள் எதிர்பாராத முத்தத்தில் வரும் பண்டாரம் குறிப்பிடத் தக்க வன். அவனை நகைச்சுவை மாந்தன் என்றே குறிப்பிடலாம். இல்லையென்பான் தொல்ல்ை' என்னும் தலைப்பில் அவனது செயல்களைக் கவிஞர் சித்திரித் திருப்பது நோக்கத்தக்கது. பொன் முடிக்கும், பூங்கோதைக் கும் இடையே உள்ள காதலைப் பொன் முடியின் பெற்றோரிடத்தே சொல்கிறான் பண்டாரம். பிறகு அங்கிருந்து பொன் முடியிடம் சென்று *நான் உன் தந்தையைப் பார்க்கவில்லை என்று சொல்வது தொடங்கி அவன் கூறுவதெல்லாம் நகைக்கவையின்பம் நல்குகின்றன. பண்டாரம் செப்புகின்றான் உன் தந்தையாரும் நானும் ஒன்றுமே பேசவில்லை அவளுக்கும் உனக்குமுள்ள அந்தரங்கத்தை யேனும், அவன் உன்னை மரத்தில் கட்டி அடித்ததையேனும் காதற் கவலையால் கடையை தோன் கவனியாமையை யேனும்