பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் | 13 அவர் கேள்விப்படவே இல்லை அதற்கவர் அழவுமில்லை நாளைக்கே அயலூர் க்குன்னை அனுப்பிடும் நாட்ட மில்லை கேளப்பா தாடிச்சேதி கேட்கவும் இல்லை! என்றான்.29 இப்பகுதியில் பண்டாரம் இல்லை என்ற சொல்லின் வழியாக உண்மையை உரைத்துவிடுகின்றான். அவனது பேச்சுத்தன்மை, பழக்கம் ஆகியவை நமக்கு நகைச்சுவையை உண்டாக்குகின்றன. என் அப்பன் குதிருக்குள் இல்லை" என்னும் பழமொழி விளக்கி நிற்கும் உண்மையைப் போன்று இப்பகுதியும் உண்மையை விளக்குகின்றது. பண்டாரம் போன்ற கதைமாந்தர்களைப் புகுத்துவதன் மூலம் இலக்கியச் சுவை பெருகுகின்ற தெனலாம். தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் வகுத்த எண்வகை மெய்ப்பாடுகளை எண்வகை உணர்ச்சிகள் அல்லது சுவைகள் எனக் குறிப்பிடமுடியும். இவ்வெட்டனுள் ஒன்றிரண்டு சுவைகள் பாவேந்தரின் பாடல்களில் இடம் பெறவில்லை. வெகுளி, பெருமிதம், உவகை, அவலம், நகை ஆகிய சுவைகளே மிகுதியாக உள்ளன. இழிவு முதலானவை மிகச் சிலவாக உள்ளன. எனினும் ஒன்பது வகையான சுவைகளைப் பாவேந்தர் ஒன்றாக ஒரே இடத்தில் பாடியுள்ளார். ஒன்பது சுவை என்பதே அப்பாடலின் தலைப்புமாகும். தலைவன், தலைவி இருவரும் நட்புப் பூணுகின்றனர். அவர்களைத் தடுக்கின்றனர் சிலர். இந்தச் சூழலின் பின்னணியில் ஒன்பது சுவைகளைப் பாடி நம் உள்ளத்தை மகிழ்விக்கிறார் பாவேந்தர். புரட்சிக்கவிஞரின் கவிதை உணர்ச்சியை மதிப்பிடும் போது தமிழ்மொழியின் உயர்வு, அதன் இன்றைய நிலை, தமிழினத்தின் மேம்பாடு, தமிழ்நாட்டின் விழிப்புணர்ச்சி ஆகியவையே வீறுவுணர்வுடன் வெளிப்படுகின்றன என்பதை