பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அறிகிறோம். பிற கவிதைகளைவிட மொழி, இனம், நாடு குறித்த கவிதைகள் தாம் உணர்ச்சி மயமாக உள்ளன. இப்படி மொழி உணர்ச்சியை உள்ளத்தில் உறுதியாகப் பதிந்திருந்த பாவேந்தர் இன்றைய நிலையில் தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அச்சமான சூழ்நிலையைப் பாடுகையில் உருக்கமான உணர்வினைப் பெறுகிறோம். கரும்பு தந்த தீஞ் சாறே கணிதந்த நறுஞ் சுளையே கவின் செய் முல்லை அரும்பு தந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்பு தந்த கெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈடழித்து வரும் புதுமை நினைக் கையிலே கெஞ்சம் பதைக்கும், சொல்ல வாய் பதைக்கும்?" என்பதில் கவிஞரின் ஏக்கத்தை, வருத்தத்தைக் காண்கிறோம். இந்நிலை மாறிட வேண்டும் என்பது பாவேந்தரின் வேணவா. பாவேந்தரின் கவிதை உணர்ச்சி களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, விளங்கும் தமிழுணர்ச்சி, இன்றைய நிலையில் தமிழ்நாட்டிற்கு மிகத் தேவையான - நியாயமான உணர்ச்சியாகும். இழந்த பல வளங்களையும் மீட்க வேண்டும் என்னும் உணர்ச்சியைக் கவிஞர் வலியுறுத்துகிறார். வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும் குழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்