பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 115. தொகையாக எதிர்கிறுத்தித் துாள் துனளாக்கும் காழ்ச்சிங்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும் கடல் போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்.”* என்பதே கவிஞரின் உணர்ச்சிகரமான வேண்டுதல். பல ஆண்டுகளுக்கு முன் இக்கவிதை எழுதப்பட்டாலும் இன்றைக்குத் தேவையான கருத்தை வலியுறுத்திக் கூறுவதால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் இனம், மொழி, நாடு மேம்பாடு அடையும் வரை இக்கவிதை நிலைத்திருக்கும் - இன்னும் சொல்லப்போனால் தமிழ் மொழி உள்ளவரை நிலைபேறுடையதாகத் திகழும். எனவே இதுகாறும் கண்ட கருத்துகளை நோக்கும்போது பாவேந்தரின் மொழி இனம் தொடர்பான உணர்ச்சி மேலோங்கி நிற்கின்றமை போதரும். கற்பனை கற்பனை என்பது வெறும் புனைந்துரை என்று சிலர் கழறுவர். அது நினைப்பவர் நெஞ்சத்தில் எல்லாம் நிலைப்பதில்லை; அது கவிஞனின் எண்ணத்திற்கே உரிய கவசமாகும். சிறார்கள் சிற்றிலிழைத்துச் சீமான்களாக வாழ்ந்து காட்டும் சிறிதுநேரக் கற்பனையும், ஏற்காத ஒருத்தியைத் தன் இச்சைக்குட்படுத்தி நடக்கவிருக்கும் திருமணம் நளன் - தமயந்தி கோலமாகவே நினைத்து உள்ளம் உருகும் காதலர் தம் கற்பனையும், பாரைத் தன் குடைக்கீழ்க் கொணர்ந்து அசோக மன்னனாகத் தன்னைப் பாவிக்கும் மண்ணாசைக் கற்பனையும், உலகப் பொருள்கள் யாவும் தன்னிடம் இருக்க வேண்டும்: தன் இல்லம் அமுதசுரபியாகக் காட்சியளிக்க வேண்டும் என்று எண்ணு கின்ற பொருளாசைக் கற்பனையும் இதுபோன்ற பிற வகைகளும் உண்டு என்றாலும் இவை யாவும் நிற்பதும் நிலைப்பதுமில்லை. கண்ட மாத்திரத்தில் கலைந்துவிடும் எண்ணத்துகள்கள் ஆகும்.