பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 புரட்சிக்க விஞர் பாவேந்தர் பாரதிதாசன் கவிஞன் படைக்கின்ற - எண்ணுகின்ற-ஆக்குகின்ற கற்பனை உலகம் உள்ளவரை உலவுகின்ற தென்றலாக வீசிக்கொண்டிருக்கும். காரணம் கவிஞன் தான் காணும் பொருளைப் புறநோக்கோடு மட்டுமல்லாமல் அகத்துள்ளும் புகுந்து ஆராய்ந்து பொருளோடேயே ஒன்றிவிடுகின்றான். உணர்ச்சிக்கு ஆளாகி, எண்ணக் கூறுகளில் முகிழ்த்து, அதனை உருவாக்கி, பின்னர் அதனைக் காண்பாரையும் கற்பாரையும் தன் மனக்கோட்டை வாசலுக்கு அழைத்து அமரச்செய்யும் அமரத்தன்மையுடையதாக்குகின்றான். இத்தகு அமரத்தன்மை ஒன்றே - கவிஞனின் எண்ணக் கோவையே கற்பனையாகும். இக்கற்பனையின் வகைகள் குறித்து மேலைநாட்டார் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். வின்செஸ்டர் என்னும் திறனாய்வாளர் கற்பனையை மூவகையாகப் பிரிக்கின்றார். அவை 1. படைப்புக் கற்பனை, 2. இயைபுக் கற்பனை, 3. கருத்து விளக்கக் கற்பனை என்பனவாம்.”* கோல்ரிட்ஜ் என்னும் அறிஞர் கற்பனையைப் பற்றிக் கூறும்போது கற்பனையை நான் இரண்டு வகையாகக் கருதுகின்றேன். ஒன்றை முதன்மையானது என்றும் மற்றொன்றை இரண்டாம் நிலையானது அல்லது சார்புக் கற்பனை" என்றும் கூறலாம். மனிதனுடைய புலனுர்ச்சிகள் அனைத் திலும் முதன்மையானதாகவும், உயிர்த்துடிப்பு மிக்க ஆற்றலாகவும் விளங்குவது முதனிலைக் கற்பனையாகும்' , ' என்கிறார். கவிதைக்கலையில் வல்லவராகிய வோர்ட்ஸ் வொர்த் என்பவர் கற்பனை யை 1. ஆக்கக் கற்பனை. 2. நினைவுக் கற்பனை என்று இருவகையாகக் கூறுகிறார்.28 இவையேயன்றி உள்ளதை உள்ளவாறே கூறுகின்ற கற்பனையும் உள்ளம் விழையுமாறு அமைகின்ற கற்பனை -யும் உண்டு. இதுகாறும் கண்ட கற்பனையின் தன்மை, வகைகள் யாவும் பாவேந்தரின் படைப்புகளில் பொருந்தி வருகின்றன. அவருடைய படைப்புகளில் படைப்புக்