பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 117 கற்பனை, இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை ஆகியன செறிந்து விளங்குகின்றன. படைப்புக் கற்பனை நாம் ஒரு பொருளைக் கண்டால் அதை அப்பொழுதே மறந்து விடுகிறோம். ஆனால் கவிஞர்கள் அப்படி இல்லை. ஓர் இடத்தில் கண்ட ஒன்றின் அழகுணர்வை நினைவி விருத்தி, பின்னர் பிறிதோர் இடத்தில் காணும் அழகுணர் வோடு அதனை ஒன்றாக்கி, புதிய ஓர் அழகுணர்வைப் படைத்துக் காட்டுவது படைப்புக் கற்பனை எனப்படும். சான்றாக, மங்கையவள் வீட்டிலே கூடத்துச் சுவரில் மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெய்யுமோ-மேற்கில் தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி தலைமூழ்க மறந்தானோ! இருள் என்னும் யானை செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவரவில்லையோ! சிம்புட்கள் இன்னும் ஏன் திரிந்தன வான்வெளியில்! திங்கள் முகம் இருள் வானில் மிதக்க அவள் ஆம்பற் செவ்வாயின் இதழளிக்க இன்னும் வரவிலையே! மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும் வயல்விட்டு வீட்டுக்கு வந்தபாடில்லை துணியுலர்த்தி ஏகாலி வீடு நுழைந்திட்டால் தொலையாத மாலைதான் தொலைந்து போமன்றோ ! அணியிரவும் தூங்கிற்றோ காலொ டிந்ததுண்டோ அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்து வரவில்லை பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே பேரின்பம் எனக்கருள இன்னும் வரவிலையே?" எனும் பாவேந்தர் பாடலில் படைப்புக் கற்பனை அமைந் துள்ளதை அறியலாம். பாவேந்தர் பகல்பொழுது மறைந்து இரவு நேரம் வந்தால் இரவில் தண்ணொளிபரப்பும் நிலவுப் பெண்ணின் கவினழகைக் காணலாமே என்று கருதுகிறார். இச்சிறிய