பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.18 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நிகழ்ச்சியைக் கற்பனையாகக் காண்பதில் விசித்திரத்தைப் படைக்க விழையும் கவிஞர், சூரியன் மறையவில்லையே என்பதற்கு மாறாக, தங்கநிறம் பெற்ற வானக்கடலில் பரிதி தலைமூழ்கவில்லை என்றும், இருள் தோன்ற வில்லையே என்பதற்கு மாறாக, இருட்டு என்ற யானை செங்கதிரைச் சிங்கமென்று அஞ்சி வாராமல் இருக்கிறது என்றும், அழகிய இரவு துரங்கிவிட்டதா? அல்லது அதற்குக் கால் ஒடிந்து நடக்க முடியாமல் ஆகிவிட்டதா? என்றும், திங்கள் முகத்தாள் இருள்வானில் மிதக்க ஆம்பல் செவ்வாயின் இதழளிக்க இன்னும் வரவில்லையே என்றும், காதலன் ஒருவன் காதற்குறியிடத்துக்குக் கூறியதுபோல் இன்னும் வாராததால் அவள்மீது காதற் புலவி கொள்வது போல் பாடியுள்ளார். மாலை நேரத்தில் ஞாயிறு மறைவதையும், யானை சிங்கத்துக்கு அஞ்சி நின்றதையும், நிலா போன்ற முகம் உடையாளிடத்துக் காதலமுதைப் பருகிய கட்டிளங் காளையின் காதல் சிறப்பையும், கால் ஒடிந்துவிட்டால் நடக்கத் தாமதமும் முடியாமையும் ஏற்படுவதையும் என்று இவை ஒவ்வொன்றையும் கவிஞர் பல நிலைகளில் கண்டிருத்தல் கூடும். அதனை, தான் பிறிதோரிடத்தில், நிலவு தோன்றவில்லையே என்ற .எ ண் ண ம் உருவானபோது, அவ்வெண்ணத்தோடு இணைத்து ஒருமைப்படுத்தி ஒரு புதிய அழகுணர்ச்சியைபடைப்புக் கற்பனையை நம் கண்முன் காட்டுகிறார். மேலும், உள்ளம் உருக்கி உயிர் உருக்கி மேல் வியர்வை வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி ஓடையின் ஒரம் உயர் சோலைக்குள் என்னைக் கோடை துரத்திட நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன் பட்டுவிரித்த பசும்புல்லின் ஆசனமும் தொட்டு மெதுவாய் வருடத் தோய்தென்றல் தோழியும் போந்து விசிற ஒரு புன்னைப் பணிப்பெண்ணும் சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன்