பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 119 தீங்கனிகள் சங்கீதம் ஆனதிருவெல்லாம் ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின் நெடுமாளிகையில்’ என்ற பாடலிலும் படைப்புக் கற்பனை சிறந்துள்ளதைக் காணலாம். இ. தி ல் கோடைக்காலத்தின் மாலையில் நீரோடையின் ஒரத்தில் அமர்ந்திருந்தேன். அழகிய புல் தரை, நல்ல காற்று, புன்னை மரம், ஆலமரம் ஆகியன அங்கிருந்தன என்பதற்கு மாறாக, பட்டு விரித்த பசும்புல் ஆசனத்தில் அமர்ந்திருக்க, தொட்டுவருடிச் சோகத்தை மாற்றத் தென்றல் எனும் தோழியும், இலையாகிய தோகை விரித்துச் சாமரம் வீசப் புன்னை என்னும் பணிப்பெண்ணும் கூந்தல், மேனி மணக்கச் சாந்தும், மகரந்தமும் பருகிடத் தேனும், தின்னக் கனிகளும், கேட்டுமகிழ சங்கீதமாக ஆலமரத்தில் வாழ் பறவைகளின் இசைகளும் சூழ்ந்திருந்தன என்று கூறுகிறார். இது தனக்கொரு காதலன் இல்லாத இளவரசியானவள் தனிமையில் இருக்கும்போது எல்லாம் இருக்கிறது; அங்கே காதலன் மட்டும் இல்லையே என்று ஏங்கும் நிலையோடு ஒப்புமைப்படுத்திப் பாடப் பட்டதாகத் தோன்றுகிறது. காதலனற்ற இளவரசியை - அவள் நிலையை - கண்டோ அல்லது பிறர் கூறக் கேட்டோ கவிஞர் அறிகின்றார். பின்னர் அதனைத் தான் காணும் இயற்கையில் இணைத்து, ஒரு புதிய படைப்பை மெருகுடன் படைத்துக் காட்டுகிறார். இவற்றை நோக்கும்போது பல்வேறு சூழலில் பரந்து கிடக்கும் காட்சியை - எழிலை - எண்ணத்தின் ஊற்றாக்கி அதனைப் பிறிதொரு சூழலில் கண்ணுறுவனவற்றோடு ஒன்றுபடுத்தி, புதியதொரு முழு வடிவத்தைப் படைத்தளிப்பதான படைப்புக் கற்பனையைப் பாவேந்தர் சிறப்பாக அமைத்துள்ளமை புலனாகின்றது. இயைபுக் கற்பனை உணர்ச்சி, கருத்து, காட்சி, சூழல் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றால் முற்கண்டது போன்றதே இது என்று