பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புரட்சிக்க விஞர் பாவேந்தர் பாரதிதாசன் இரண்டையும் இயைத்து அழகுணர்வோடு ஆக்கிக் காட்டுவது இயைபுக் கற்பனை எனப்படும். 1 . தங்க இழையுடன் நூலை வைத்துப் பின்னிய ஆடை காற்றில் பெயர்ந்தாடி அசைவதைப்போல் நன்னீரில் கதிர் கலந்து நளிர்கடல் நெளிதல் கண்டேன்."" கடல்நீரின் பரப்பில் கதிரவனின் ஒளிபட்டுத் தெறிக்கும். காட்சியைக் காணும் கவிஞர் அக்காட்சியை, தான் முன்பே கண்ட தங்க இழையையும், நூலையும் இணைத்துப் பின்னிய ஆடை காற்றில் அசைந்தாடுவது போல் இருக் கின்றதென்று இரு காட்சிகளையும் இயைத்துக் காணு. கின்றார். இதில் கடல் நீரின் பரப்பு மெல்லிய ஆடைபோல் உள்ளதென்று இயல்பாகக் கூறவேண்டியதற்கு மாறாக, கற்பனை கலந்து மெருகூட்டியமை வியப்பினையும் நலத்தை யும் நல்குகின்றது. மேலும், கோடையின் வெப்பத்தால் வாடி, துன்புறும் நிலையில் மழை வந்து இன்புறச் செய்தது என்பதனைக் கூற. வரும் ஆசிரியர், அதனை இயல்பாகக் கூறாமல் எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கிருப்பவரை அடக்கி வாட்டியபோது பொறுத்தவர்கள் .ெ ப ா ங் கி எழுந்ததால் புரட்சி தோன்றியது; பொதுவுடைமை வாய்த்தது அதனால் மகிழ்ச்சி நிலவிற்று என்னும் உவமை வாயிலாக இணைத்துக் காட்டுகின்றார். ஒரு புரட்சிக் கருத்தைத் தன் மனத்துக்குள் தேக்கி இயற்கையில் காணுகின்ற இயல்பான நிகழ்ச்சியோடு இயைத்துக் கற்பாரை வியக்கச் செய்யவும் - புரட்சிக்குட் படுத்தும் - ஆற்றல் வாய்ந்த கற்பனையை அழகிய உவமையின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார். இதனை,